search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியப்பிரதேசம்"

    • ரீனா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
    • அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார்.

    மத்தியப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தண்டி குர்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணி பெண் ரீனா கொலை செய்யப்பட்டதாக நேற்று அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரீனாவின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து ரீனாவின் அவரது தந்தை ராம் பிரசாத் போலீஸ்காரர்களுடன் தண்டி குர்த் கிராமத்தை அடைந்த போது எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலின் அருகிலிருந்து அவரது மாமியார் தப்பியோடினார்.

    பின்னர் எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலை அணைத்த குடும்பத்தினர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரீனாவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு மிதுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒன்னரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். தற்போது ரீனா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக ரீனாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கணவர் மற்றும் மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தான் ரீனா கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
    • அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.

    இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.

    அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.

    மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.

    அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.

    அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது

    இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

    நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.

    இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.

    வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது. 

    • ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
    • மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார்.

    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது அவரை பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் ஒருவன் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்துக் கொண்டே இருந்தான்.

    இதை மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார். 'மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக் கொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்' என்றார்.

    பிரதமர் மோடியின் சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை பார்த்து பிரதமர் மோடி பேசியதும் வீடியோவாக இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தொட்டிக்கு பதிலாக தனது உடலில் சோயா பீன்ஸ் செடியுடன் சுற்றித்திரிந்த எலி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
    போபால்:

    இயற்கையின் உருவாக்கத்தில் ஒவ்வொரு உயிர்களும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் ஒரு தனித்துவம் பெற்றுள்ளன. சில சமயங்களில் படைப்பின் குணத்தையும் மீறி சில அதிசயங்கள் நடந்து விடுகின்றன. மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது பயிர்களை பார்க்கச்சென்ற அவர் வியப்பின் உச்சிக்கே சென்றுள்ளார். செடியை உடலில் தாங்கிய எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடியுள்ளது. எலியின் கழுத்துப்பகுதியில் சோயா செடி இலைகளுடன் சிறிய அளவில் வளர்ந்திருந்தது.

    தனது செல்போனில் தாதர் சிங் வீடியோ எடுத்துள்ளார். உயிரியல் வினோதமாக இது இருந்தாலும் அந்த எலி வலியுடன் சுற்றித்திரிந்ததை அவர் உணர்ந்துள்ளார். பின்னர், எலியை தனது வீட்டுக்கு கொண்டு சென்ற அவர், செடியை பிடுங்கியுள்ளார்.

    கழுத்துப்பகுதியில் காயம் இருந்த போது விதைகள் அதில் விழுந்து செடி வளர்ந்து இருக்கும். இது ஒரு உயிரியல் அதிசயம், கழுத்தில் செடி இருந்தாலும் அதன் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அங்குள்ள கல்லூரி ஒன்றின் உயிரியல் துறை தலைவர் கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க.. 

    (courtesy Disclose Screen)
    மத்தியப் பிரதேசம் மாநில சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ நீலம் அபய் மிஷ்ரா, சொந்த கட்சியின் முக்கிய தலைவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலம் சிமாரியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நீலம் அபய் மிஷ்ரா. பாஜகவை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான இவர் இன்று சட்டசபை கூட்டத்தின் பூஜ்ஜிய நேரத்தின் போது, எழுந்து நின்று, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் கட்சியின் முக்கிய தலைவர் துன்புறுத்தல் கொடுப்பதாகவும், மிரட்டல் விடுவதாகவும் பேசினார்.

    திடீரென அவர் கதறி அழ தொடங்கினார். இதனை அடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அபய் மிஷ்ராவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். பெண் எம்.எல்.ஏ.வுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? என காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.

    இதனை அடுத்து பேசிய, உள்துறை மந்திரி அபய் மிஷ்ராவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். சில பெண் எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆறுதல் கூறியதை அடுத்து, அபய் மிஷ்ரா இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் 1 கி.மீ. தூரம் நடந்து அதிக ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஷாபூரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் மற்றும் பெண்கள் அன்றாட தேவைக்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அங்குள்ள கிணற்றில் நீரானது அடிமட்டத்தில் உள்ளது. அதனை வாளி மூலம் இறைக்க முடியாததால் பெண்கள் படிக்கட்டுகள் இல்லாத கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைத்தனர்.

     
    இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக அக்கிராமத்திற்கு தினமும் 2 லாரி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் இறைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Watercrisis
    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.


    இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கோழியை கொன்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #henmurdercase
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா வால்மிகி என்ற பெண் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். அவர் கோழிகளில் ஒன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளது. இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கோழியை விரட்டியளித்துள்ளார்.

    இதற்கிடையில், ஒருநாள் தன் வீட்டிற்குள் வந்த கோழியை குச்சியால் அடித்து, அதனை கொன்றார். இதனை அறிந்ததும் சுனிதா அவர் வீட்டிற்கு வந்து நியாயம் கேட்டார். ஆனால் அந்த வீட்டில் இருந்த அனைவரும் சுனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த சுனிதா போலீசாரிடம் புகார் அளித்தார். தனக்கும், தன் மகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 429-ன் படி 50 ரூபாய் மதிப்புக்கு அதிகமாக உள்ள உயிரினத்தை கொல்லுவது தண்டனைக்குரிய குற்றமாகும். #henmurdercase

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது இனி கட்டாயமாக ஜெய் ஹிந்த் கூற வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேசியக்கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பிரசண்ட் என்பதற்கு பதிலாக இனி 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

    அதன்படி இந்த முறையானது சட்னா மாவட்டத்தில் முதன்முதலாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.



    இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை அதிகப்படுத்தலாம். ஜெய் ஹிந்த் என கூறுவது அனைத்து மத மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். இது இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உதவும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணாக்கார்கள் வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும்போது தங்கள் பெயருக்கு பதிலாக கட்டாயமாக ஜெய் ஹிந்தி கூற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. #mpgovt #jaihind



    மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #madhyapradeshgirl
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வகுப்பு சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ரவீந்திர சாத்கார் சிறுமி வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை உயிருடன் எரித்தார்.

    இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடன் விசாரணை நடைபெற்று வருகிறது.  #madhyapradeshgirl
    ×