தூத்துக்குடியில் 4-ந்தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளதுகூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.
தூத்துக்குடியில் 4-ந்தேதி  மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com