search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express train"

    • செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரெயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த 16847/16848 ரெயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இணைத்து தீபாவளி முதல் இயங்க தொடங்கியது.

    செங்கோட்டை - மயிலாடுதுறை ரெயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைக்கு நேரடியாக செல்ல முடிகிறது. அதைபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபா ளையம், சங்கரன்கோவில். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி - விருதுநகர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன.

    தென்காசி:

    தென்காசி - விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்த விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகிய 3 ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்திற்கும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரெயிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை -மதுரை இடையே இரு ஜோடி பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் 2020 மற்றும் சமீபத்தில் நடைபெற்ற ரெயில்கள் கால அட்டவணை சந்திப்புகளின்போது, தென்னக ரெயில்வே சார்பாக வண்டி எண் 16327/16328 குருவாயூர் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் வண்டி எண் 56733/56734 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயில் ஆகிய இரு ரெயில்களையும் ஒன்றாக இணைத்து குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே விரைவு ரெயிலாக இயக்க முன்மொழிவு செய்யப்பட்டது. மேலும் குருவாயூர் - புனலூர் ரெயில் புதிதாக இயக்கப்பட்ட போது நடைபெற்ற விழாவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் கேரள எம்.பி.க்கள் இந்த ரெயில் புனலூர் செங்கோட்டை ரெயில் பாதைகள் முடிந்தவுடன் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

    இருக்கைகள் காலி

    இந்த குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன. புனலூரில் இருந்து மதுரை வரை நீட்டிக்கப் பட்டால்தான் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும். ரெயில்வே வருமானமும் அதிகரிக்கும்.

    மேலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேரும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஆரியங்காவு, சபரிமலை அய்யப்பன், குருவாயூர் போன்ற அனைத்து கோவில்களை இணைக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பொங்கி வழியும் பாலருவி

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக பாலக்காடு வரை இயங்கும் பாலருவி விரைவு ரெயிலில் தமிழகப் பகுதிகளில் இருந்து ரெயில் பயணிகள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.

    சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்

    மேலும் சுற்றுலாவிற்கு குற்றாலம் மற்றும் அதை சுற்றி உள்ள அருவிகள், கேரளாவில் உள்ள பாலருவி, தென்மலை , 13 கண் பாலம் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதனால் பயணிகள் போக்குவரத்து சுற்றுலா ஆகிய அனைத்தும் மேம்படும். ரெயில்வேக்கும் நல்ல வருமானம் ஈட்டித் தரும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை - கொல்லம் இடையே உள்ள வழித்தட மக்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரெயில் போல செயல்படும். தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கு இந்த ரெயில் மிகவும் உதவியாக இருக்கும். சபரிமலை சீசன் தொடங்க இருப்பதால் அய்யப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரைகளால் ஆன விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மதுரை குருவாயூர் ரெயிலுக்கு ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் நடைபெற்று வரும் பணி காரணமாக அந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நெல்லையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (22620) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் மறுமார்க்க மாக பிலாஸ்பூரில் இருந்து நாளை மறுநாள் சேலம் வழியாக நெல்லைக்கு 6-ந் தேதி வந்து சேரும் விரைவு ரெயிலும் (22619) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அம்பை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39).

    இவர் தனது மனைவி மற்றும் மகள் ஷாலினியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று மாரியப்பன் ஊருக்கு திரும்பினார். இரவு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடும்பத்தோடு பயணம் செய்தார். இன்று அதிகாலை ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் மாரியப்பன் குடும்பத்தோடு ரெயிலை விட்டு இறங்கி வீட்டிற்கு சென்றார்.

    வீட்டிற்கு சென்று பார்த்த போது மகள் ஷாலினியின் காதில் கிடந்த 2 கிராம் கம்மலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து தேடி பார்த்தார்.

    இது தொடர்பாக நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    இதையடுத்து நெல்லை போலீசார் மாரியப்பனை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அவர் அங்கிருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். மாரியப்பனிடம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு, சோம சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கம்மலின் அடையாளங்களை தெரிவித்ததையடுத்து மாரியப்பனிடம் கம்மலை போலீசார் ஒப்படைத்தனர்.

    கம்மலை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மாரியப்பன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். 

    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தொப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இன்று காலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ரெயில் வந்தது. அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரெயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரெயில் தடம்புரண்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் பெட்டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 6 பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கினர்.

    அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். மேலும் மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்டவாளத்தில் கிடந்தன.

     மழை காரணமாக ரெயில் பெட்டிகள் மீது பாறைகள் விழுந்து சரிந்துள்ளதை காணலாம்

    இதுபற்றி பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ உபகரண வேனுடன் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் விரைந்து வந்து ரெயில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.

    தடம்புரண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரெயிலில் 7 பெட்டிகள், மாற்று என்ஜீன் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் 4 பெட்டிகள் தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில் தடம் புரண்ட விபத்தில் ரெயில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர்.

    நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்தனர்.

    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக சேலம்-பெங்களூரு ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பயணிகள் குறித்து தகவல்களை பெற தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


    நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டைக்கு விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    நெல்லை:

    கொரோனா தொற்று ஊரடங்கை தொடர்ந்து இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.தற்போது இந்த ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு கட்டணமாக ரூ.35-ம், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டைக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.

    இன்று முதல் நாள் என்பதால் இந்த ரெயில்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் இல்லை. எனவே இன்று இயக்கப்பட்ட இந்த ரெயில்களில் குறைந்த பயணிகள் சென்றனர். பல பெட்டிகள் காலியாக சென்றது.

    இந்த ரெயில்கள் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பொன்னேரி:

    சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொன்னேரி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரெயில்வே துறை அலுவலகங்கள், ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது குலஷேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கம் 4 வழிப் பாதையாக மாற்ற அனுமதியளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு ரெயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    ரெயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணச்சீட்டு அலுவலகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுகுறித்து பயணிகள் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திருப்பூரில் இருந்து கோவை ரெயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வடகோவை ரெயில் நிலையத்தை தாண்டி வந்துகொண்டு இருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற ஆர்.எஸ்.புரம் போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் சிக்கிய வாலிபர்களை போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் கோவை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் ரத்தினபுரியை சேர்ந்த சூர்யா (வயது 18), சதீஸ்குமார் (18) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய ரத்தினபுரியை சேர்ந்த பிரவீன் என்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை மேம்பாலம் அடியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபரின் கால்கள் துண்டானது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மலையம்பட்டி அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 35). இவர் இன்று காலை மதுரை மேம்பாலம் அடியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த பாதையில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் காலிப்பெட்டிகள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாசானமுத்து கால்கள் மீது ரெயில் சக்கரங்கள் ஏறின. இதில் அவரது 2 கால்களும் துண்டாயின.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாசானமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #tamilnews
    மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது லெவல் கிராசிங்கில் சரக்கு லாரி மோதியதில் ரெயில் தடம்புரண்டது. #TrainDerailed #TrivandrumRajdhani
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரெயில் மீது பலமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.



    தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #TrainDerailed #TrivandrumRajdhani
    மானாமதுரை வழியாக பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்கு மானாமதுரையில் இருந்து தான் பிரிந்து செல்ல வேண்டும்.

    மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது மானாமதுரையில் இருந்தும், மானாமதுரை வழியாக இந்தியா முழுவதும் ஏராளமான ரெயில்கள் ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டன.

    அகல ரெயில்பாதை வசதி வந்தவுடன் பல ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. ராமேசுவரம் -பாலக்காடு மற்றும் கோவைக்கு பழனி, பொள்ளாச்சி வழியாக ரெயில் இயக்கப்பட்டது. இப்போது இல்லை.

    ராமேசுவரம்-கோவை இடையே திருச்சி, கரூர், ஈரோடு வழியாக வாரம் ஒரு ரெயில் மட்டுமே வெகுதூரம் சுற்றிச் செல்லும் நிலையில் விடப்பட்டு உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு புதிதாக விடப்பட்ட 3 ரெயில்களும் ராமேசுவரம், மானாமதுரை, திருச்சி, கும்பகோணம், விழுப்புரம் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது.

    தற்போது பண்டிகை கால சிறப்பு ரெயில்களில் சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் உள்ள புதுக்கோட்டை, காரைக்குடி, சிவங்கங்கை மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக எந்தவித சிறப்பு ரெயிலும் இயக்கப்படாததால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்-சென்னை இடையே முன்பதிவு இல்லாத அந்தியோதயா சிறப்பு ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை-பழனி வழியாக கோவை, பாலக்காடு வரை புதிய ரெயில்கள் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென் மாவட்டத்தில் இருந்து நெல்லை வந்த நவீன எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் ஆர்வமாக பயணம் செய்தனர்.
    நெல்லை:

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்களில், ஐ.சி.எப். தயாரிப்பிலான பழைய ரெயில் பெட்டிகளை மாற்றி அதிநவீன பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. தற்போது தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிநவீன ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

    நேற்று சென்னை எழும்பூரில் இந்த ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதில் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தார்கள். இந்த ரெயில் இன்று காலை நெல்லை வந்தது. நெல்லை பயணிகள் இந்த நவீன பெட்டிகளை ஆர்வத்துடன் பார்த்தனர். இதில் 2 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்றும், 3 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 6, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 11, பொது பெட்டிகள் 3, 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.

    ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வகை பெட்டிகளின் எடை 52 டன்னுக்கும் குறைவானது. இதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்துடன் இந்த ரயில் பெட்டிகளை எளிதாக இயக்க முடியும். பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதும், விபத்து நேரங்களில் எளிதாக கவிழ்ந்து விடாமல் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்பக்கூடிய பயணி பெட்டிகள் என்பதால் இனிமேல் ரெயில் பயணிகளுக்கு கூடுதல் அமைதியை வழங்க கூடியதாகவும் இந்த வகை பெட்டிகள் அமைந்துள்ளன.

    இந்த பெட்டிகளில் நவீன வாஷ்பே‌ஷன்கள், கழிவறைகள் உள்ளன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் கூடுதலாக 8 பெர்த் என மொத்தம் 80 படுக்கைகள் இடம்பெற்று உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நாளை முதல் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் இத்தகைய நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. அதிவேகத்தில் செல்லும் வகையில் இந்த பெட்டிகள் உள்ளதால் இரட்டை ரெயில் பாதை வந்த பின்னர் நெல்லையில் இருந்து சென்னைக்கு பயண நேரம் மேலும் மிச்சமாகும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
    ×