search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "derailed"

    • பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
    • தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.

    தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தொப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இன்று காலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ரெயில் வந்தது. அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரெயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரெயில் தடம்புரண்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் பெட்டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 6 பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கினர்.

    அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். மேலும் மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்டவாளத்தில் கிடந்தன.

     மழை காரணமாக ரெயில் பெட்டிகள் மீது பாறைகள் விழுந்து சரிந்துள்ளதை காணலாம்

    இதுபற்றி பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ உபகரண வேனுடன் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் விரைந்து வந்து ரெயில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.

    தடம்புரண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரெயிலில் 7 பெட்டிகள், மாற்று என்ஜீன் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் 4 பெட்டிகள் தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில் தடம் புரண்ட விபத்தில் ரெயில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர்.

    நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்தனர்.

    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக சேலம்-பெங்களூரு ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பயணிகள் குறித்து தகவல்களை பெற தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


    சொர்னூர் நிலையம் அருகே இன்று காலை சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
    கோவை:

    சென்னை-மங்களூர் இடையே மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் நேற்று இரவு 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் இன்று காலை 6.40 மணியளவில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சொர்னூர் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தது. அப்போது திடீரென ரெயிலின் 2 பெட்டிகள் பலத்த சத்தத்துடன் தடம் புரண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரெயில் பயணிகள் சத்தம் போட்டனர்.உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பிரேக் போட்டு நிறுத்தினார்.

    ரெயில் தடம் புரண்டபோது ரெயில் பெட்டிகள் சிக்னல் கம்பங்கள் மீது சாய்ந்தது. இதனால் கம்பங்கள் சரிந்து சிக்னல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. ரெயில் சொர்னூர் ரெயில் நிலையத்தை நெருங்கும்போது மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலா பகுதியில் சென்று கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #TrainDerailed #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 123 கி.மீ தொலைவில் உள்ளது கண்டாலா ரெயில்நிலையம். இன்று அதிகாலை 3 மணியளவில், மும்பை- புனே வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் கண்டாலா ரெயில் நிலையத்தில் நுழையும்போது திடீரென தடம்புரண்டது.

    இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ரெயில் மெதுவாக இயக்கப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தடம் புரண்ட ரெயிலை தண்டவாளத்தில் நிறுத்தி சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு, மீண்டும் ரெயில் இயக்கப்பட்டது. #TrainDerailed #Maharashtra
    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்றபோது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.
    திருவண்ணாமலை:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று காலை சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்ற போது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சுதாரித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விழுப்புரம் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்து வருகின்றனர்.

    இதனால் மன்னார் குடியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டது.

    இதையடுத்து மாற்று ஏற்பாடாக மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக திருப்பதி செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.



    ×