search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடம்புரண்ட சரக்கு ரெயில்.
    X
    தடம்புரண்ட சரக்கு ரெயில்.

    கலசபாக்கம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது - மாற்று வழியில் திருப்பதி ரெயில் இயக்கம்

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்றபோது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது.
    திருவண்ணாமலை:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்று காலை சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காலூர் என்ற இடத்தில் சரக்கு ரெயில் சென்ற போது 3 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சுதாரித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விழுப்புரம் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரிசெய்து வருகின்றனர்.

    இதனால் மன்னார் குடியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கபட்டது.

    இதையடுத்து மாற்று ஏற்பாடாக மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக திருப்பதி செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.



    Next Story
    ×