search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரியப்பனிடம் கம்மலை ஒப்படைக்கும் போலீசார்
    X
    மாரியப்பனிடம் கம்மலை ஒப்படைக்கும் போலீசார்

    நாகர்கோவில் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிடந்த 2 கிராம் தங்க கம்மல் உரியவரிடம் ஒப்படைப்பு

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அம்பை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39).

    இவர் தனது மனைவி மற்றும் மகள் ஷாலினியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று மாரியப்பன் ஊருக்கு திரும்பினார். இரவு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடும்பத்தோடு பயணம் செய்தார். இன்று அதிகாலை ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் மாரியப்பன் குடும்பத்தோடு ரெயிலை விட்டு இறங்கி வீட்டிற்கு சென்றார்.

    வீட்டிற்கு சென்று பார்த்த போது மகள் ஷாலினியின் காதில் கிடந்த 2 கிராம் கம்மலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து தேடி பார்த்தார்.

    இது தொடர்பாக நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    இதையடுத்து நெல்லை போலீசார் மாரியப்பனை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அவர் அங்கிருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். மாரியப்பனிடம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு, சோம சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கம்மலின் அடையாளங்களை தெரிவித்ததையடுத்து மாரியப்பனிடம் கம்மலை போலீசார் ஒப்படைத்தனர்.

    கம்மலை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மாரியப்பன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். 

    Next Story
    ×