search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experiment"

    • ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
    • சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த சோழபுரம் மகாராஜபுரத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 4 நபர்கள், நாங்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.

    உங்களது கிராமத்திலும் முகாம் நடத்த உள்ளோம். குறைந்த அளவு பணம் செலுத்தினால் சிகிச்சை அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    இதை நம்பிய 80 குடும்பத்தினருக்கு 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர்.

    அவர்கள் கூறியது போல் அந்த 4 பேரும் நேற்று ஊராட்சி தலைவரை சந்தித்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

    அவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.

    இந்நிலையில், முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் தனது வீட்டுக்கு சென்றதும் மயக்கம் அடைந்துள்ளார்.

    அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் என்ன மாத்திரை கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர்களிடம் நீங்கள் உண்மையிேலயே டாக்டர்கள் தானா? உங்களது சான்றிதழை காண்பியுங்கள் என்று கேட்டு அவர்களை பள்ளியிலேயே சிறைபிடித்தனர்.

    பின்னர், இதுகுறித்து சோழபுரம் போலீசாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மக்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்றும் அவர்கள் உண்மையான டாக்டர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மனமுடைந்த சபிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சபிதா (வயது 20). இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. சபிதாவின் கணவர் பெங்களூரில் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்கு சென்ற ராஜாவுக்கும் சபீதாக்கு செல்போன் மூலம் தகறாறு ஏற்பட்டது, இதனால் மனமுடைந்த சபிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த அக்கம்ப க்கத்தினர் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கப்பட்டது.
    • முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட விக்ரமம் ஊராட்சியில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர் குருநாதன் தலைமை தாங்கினார்.

    தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பயனாளிகளக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, இசிஜி பரிசோதனை செய்து , மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.

    இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    முகாமில் முகாம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் ஜான்பால் அசோக், சந்துரு கிளை மேலாளர் ஏசுராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஊராட்சி செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுக்கூர் ரோட்டரி சங்கர் சார்பில் முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    • 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைசெய்யபட்டது
    • நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனுதாக்கல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோ தனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கை வயலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவி த்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமறுத்த 8 பேரிமும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புது க்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரையும் டி.என்.ஏ. பரசோதனைக்கு உட்படுத்தி கொள்ள கோர்ட் உத்தர விட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சிறுவர்கள் 4 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்ப ட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

    • மாயூரநாதர் கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • யானையின் கண், தோல், பாதம்,ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார், மீனா ஐ.எப்.எஸ் பரிந்துரையின் பேரில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • கிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா், திருப்புறம்பியம், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் வரும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா் வட்டத்துக்குள்பட்ட வெண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை அருகே யுள்ள அதிராம்பட்டினம் துா்கா செல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்கள் வரும் 24-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    இந்த முகாமில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய் உள்ளிட்ட அனைத்துக்கும் பரிசோதனை செய்யப்படும்.

    முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

    மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற 24-ந் தேதி ஆலங்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி வட்டாரம் மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டூர், திருவாரூர் வட்டாரம் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்க ளுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ பிரிவிலிருந்து சிறப்பு டாக்டர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். 

    • இறந்து கிடப்பது யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
    • பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கிலிருந்து பெரமையா கோயில் சந்திப்பு வழியாக பெரிய கோட்டை செல்லும் சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்ததை பொதுமக்கள் பார்த்து மதுக்கூர் போலீஸ் நிலை யத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    ஆனால் இறந்து கிடப்பது யார் ? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.
    • டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி க்கொண்டு செல்வதற்கு எதுவாக தனியார் பள்ளிகள் சார்பில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்ச க்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவ லகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளி களுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? முதலுதவி அளிக்கும் மருந்து பெட்டகம் உள்ளதா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். பின்னர் அந்த பஸ் டிரைவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக அனைத்து வாகன டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    • தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பூதலூர் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார் ,சுரேஷ் , ஏட்டு சரவணசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முகாமில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ ஆலோ சனை முகாம் நடைபெற்றது.

    முகாமை, ராஜகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிர் நலம், வயிற்றுக்கோளாறு, உடல் பருமன், குடலிரக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமானபிரச்னை களால் பாதிக்கப்ப ட்டவ ர்களுக்கு பரிசோத னைகள் மேற்கொ–ள்ள ப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் முகாமில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைதேவைப்ப டுவோர்க்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகள் வழங்க ப்படவுள்ளது. நிகழ்ச்சியை ஜெம்ம ருத்து– வமனை, மயிலா டுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குத்தாலம் ஸ்ரீஆதிச ங்கரர் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாலச்சந்திர சிவச்சாரியார், ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொன்டனர்.

    ×