என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.
இலவச மருத்துவ முகாம்
- பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கப்பட்டது.
- முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட விக்ரமம் ஊராட்சியில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர் குருநாதன் தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பயனாளிகளக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, இசிஜி பரிசோதனை செய்து , மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் முகாம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் ஜான்பால் அசோக், சந்துரு கிளை மேலாளர் ஏசுராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஊராட்சி செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மதுக்கூர் ரோட்டரி சங்கர் சார்பில் முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.






