என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேங்கைவயல் சம்பவம்:4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
- 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைசெய்யபட்டது
- நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனுதாக்கல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோ தனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கை வயலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவி த்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமறுத்த 8 பேரிமும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புது க்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரையும் டி.என்.ஏ. பரசோதனைக்கு உட்படுத்தி கொள்ள கோர்ட் உத்தர விட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சிறுவர்கள் 4 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்ப ட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.






