search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executive committee meeting"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரத் துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.வட்டாரச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை விளக்கி இயக்க உரையாற்றி னார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வகுப்பறை கற்றல் கற்பித்தலில் நடைமுறை சாத்தியமற்ற மாணவர்க ளிடையே கற்றல் இடை வெளியை உருவாக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்.

    கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண்டர், அக விலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை போன்றவற்றை தமிழக அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.

    • பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தொண்டி பேரூராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப் பாளராக மாவட்ட செயலா ளர் தேனி.சை.அக்கிம் கலந்து கொண்டார்.மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் வர வேற்றார்.

    சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கைகளை இழந்த ராமநாத புரம் மாவட்ட குழந்தைக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் அவர் களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் மேலும் இது விஷயமாக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதி வேண் டும் என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறி யதை வன்மையாக கண்டிக் கிறோம்.

    அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும். தேவிபட்டினம் ஊராட்சி நவபாசானம் செல்லும் வழியில் மாநிலங் களவை உறுப்பினர் அன்பு மணி ராமதாஸின் நிதியி லிருந்து உயர் கோபுர விளக்கு அமைப்பது என்றும், வருகிற 25-ந் தேதி பசுமைத் தாயகம் நாளான பா.ம.க நிறுவனர் ராம தாஸின் பிறந்தநாளில் திரு வாடானை ஒன்றியம் பகுதி யில் 100 மரக்கன்றுகள் நட்டு, 10 இடங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் ஒன்றிய தலைவர் மணி என்ற ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராம நாதபுரம் மாவட்ட செயலா ளர் பாலா, ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் திருவாடானை ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் வாலாஜா இந்து முன்னணி ஒன்றிய செயற்குழுகூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர். மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் தீர்மானத்தை நிறைவேற்றி னார். துல்கர் நன்றி கூறினார்.

    சிறப்பு விருந்தினராக கவிஞர் செஞ்சி சின்னசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அலுவலகம் முன்பிருந்த டாஸ்மாக் கடையை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, அதற்கு உறுதுணையாக இருந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    மேலும் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில், முருகன் கோவில் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்விற்கு கீழக்கரை ஒன்றிய செயலாளர் லோகநாதன் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் ஷரீப், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளி முத்து ஒன்றிய துணைச் செயலா ளர் முனியசாமி, ராமநாத புரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் இளைஞர் சங்கத் தலைவர் முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்த நிர்வாகிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி? என்ற புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட பார்வையாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வடக்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது. மண்டல் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பார்வையாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மண்டல் பிரபாரி வக்கீல் சின்னதம்பி, மாவட்ட துணைதலைவர் வக்கீல் வாரியார், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல துணைதலைவர் மகாராஜன், மண்டல பொது செயலாளர்கள் சங்கர்கணேஷ், பால் மனோகர், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் டாக்டர் ராமசாமி, மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவர் குப்பபிச்சை, மாவட்ட துணைதலைவர் செல்வசுந்தரி, மூத்த உறுப்பினர் பாலாசிங் யாதவ் மற்றும் 65 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில் தேசத்தின் வரலாறுகளை நினைவு கூறும் வகையில் புதிய பாராளுமன்றத்தை பிரமாண்டமாக உருவாக்கி அதை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் தளவாய் மற்றும் மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் கலந்து கொண்டார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். செயற்குழு தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமியும்,

    வள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் சுமித்ராவும் வாசித்தார்.

    ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமகுட்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை

    • கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளரும் ,தெற்கு மண்டல் பார்வையாளருமான உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு பேசினார்.
    • குடோனில் உள்ள தானியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல் பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் அய்யன் கோவில் தெருவில் நடைபெற்றது. தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார், மண்டல் பொதுச் செயலாளர் பிரபு, செயற்குழு உறுப்பினர் விந்தியா முருகன், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜெயராம்,விவசாய அணி முருகன், மாநில திட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளரும் தெற்கு மண்டல் பார்வையாளருமான உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கூட்டத்தில், 53 வது வார்டு ஆனந்திநகர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் சாலை அமைக்காமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்கக் கோருதல், முத்தையாபுரம் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்த மாநகராட்சி பாராட்டியும், அங்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவும், அமுதா நகர் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக மக்கள் குடியிருக்கும் பகுதியின் நடுவில் சிலிண்டர் குடோன் அமைத்து மக்களை அச்சுறுத்தி வரும் தனியார் சிலிண்டர் குடோனை அகற்றக் கோருத்தல், 52-வது வார்டு கிருஷ்ணா நகர் பேரின்நகர் மேல்புறத்தில் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் நீண்ட நாட்களாக தானியங்கள் கிடப்பில் கிடப்பதால் விஷ பூச்சிகள் உருவாகி பொதுமக்களை அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே குடோனில் உள்ள தானியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

    இதில் தெற்கு மண்டல துணை தலைவர்கள் அருண் பாபு, முருகேசன், இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர் குலசை ரமேஷ், வர்த்தகப்பிரிவு தெற்கு மண்டல தலைவர் வீரமணி, ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி,துணைத் தலைவி சிலம்பொழி மற்றும் நிர்வாகிகள் சங்கரநாராயணன், முனியசாமி, முத்துசாமி,பாலா, ராஜ்குமார், அஜய், முருகேசன், ராமலட்சுமி மற்றும் கிளை தலைவர்கள் வெள்ளை பாண்டி ராஜகோபால் மாடசாமி வீரநாயக்கன்தட்டு வேல் சுடலை சவுந்தர்ராஜன் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் மனோ கரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். அதில், வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதபடுத்த வேண்டும். தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும்.

    ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமிக்க பட வேண்டிய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பட்டியலை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. தலை வர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தியதை போல் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்காக முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தில்தான் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் என்ற பெருமையை பெற கடுமை யாக உழைக்க வேண்டும். தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவடடம் முதலிடம் பெற வேண்டும். சமூக வலைத்தளங்களை தமிழக அரசின் சாதனைகளை அனைவரும் அறியும் வகை யில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, பூசைபாண்டியன், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா என்ற தேவதாஸ், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி,

    மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, விவேகானந்தன், சுந்தரவடி வேலு, மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், இளைஞரணி சரவணன்,

    பசுபதிபாண்டியன், திலிப் குமார், வீமராஜ், சுற்று சூழல் அணி அழகுதுரை, நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய் குட்டி, கேபிள் கணேசன், வீரா, சிவா, ஜான்சன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நுகர்பொருள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க ஆண்டு விழா செயற்குழு கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    செயற்குழு கூட்டத்தில் செயலாளர் வினோத்கண்ணா, பொருளாளர் வெங்கட் சுப்பிரமணியன், வக்கீல் தியாகராஜன், பட்டய கணக்காளர் முகமதுகான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தருக்கான விற்பனை கமிஷன் தொகையை 0.5 முதல் 2 சதவீதம் வரை ஜூன் மாதத்திற்குள் கண்டிப்பாக உயர்த்த வேண்டும், மறைமுக வரி விதிப்புகள் நிலுவையில் உள்ள வணிகருக்கு மற்ற மாநிலங்களை போல் சமாதான திட்டம் கொண்டு வர வேண்டும், தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலை கொள்கையில் வீடியோகஸ்தருக்கு பொருட்களை சப்ளை செய்யக் கூடாது.

    நுகர்பொருள் மொத்த- சில்லறை விநியோக வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பெரிய கார்பரேட் நிறுவனங்களும் ஈடுபட தடை விதிக்க வேண்டும், நடப்பு நிதியாண்டில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே எந்த ஒரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. வரி இருக்க வேண்டும், இணக்க வரி 1.5 கோடியாக ஆண்டு விற்பனை உள்ளது. அதனை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும்.

    சேல்ஸ் இன்வாய்ஸ் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருந்தால் ஈ-வே பில் எடுக்க வேண்டி உள்ளது. அதனை மற்ற மாநிலங்க ளைப் போல ரூ.2 லட்சத்துக்கு உயர்த்த வேண்டும். ஈ-வே பில்லை ரத்து செய்ய வேண்டும், புதிய வரி விதிப்பு அல்லது வரி விலக்கு போன்ற அறிவிப்பை இடையில் அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
    • கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    • வேலூர் கிரீன் சர்க்கிளில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுசா, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டு பேசினார்.

    மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பார்வையாளர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் மனோகரன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுகன்யா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×