search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க செயற்குழு கூட்டம்"

    • கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
    • கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    • பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    • பின்னலாடைத்துறைக்கு தேவையான கண்காட்சி அரங்கம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று பின்னர் முதல் செயற்குழு கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணைத்தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் 20 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், திறன்மிகுந்த தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதி குழுமம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துதல், பின்னலாடைத்துறைக்கு தேவையான கண்காட்சி அரங்கம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு தேவையான நிலத்தை அரசிடம் இருந்தோ அல்லது ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் அடையாளம் கண்டு தெரிவிக்கவும் ஆலோசித்தனர். இந்த திட்டம் தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் தமிழக அரசின் துணி நூல் ஆணையாளர் வள்ளலாரை சந்தித்து பேசி திட்டத்தை விரைவுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    மத்திய அரசால் உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.-2) என்ற புதிய திட்டத்தில் பருத்தி ஆடைகளும் சேர்க்கப்பட இருக்கிறது. அதுதொடர்பாகவும் அரசிடம் வலியுறுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    ×