search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encroachment"

    • இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டைகள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

    இளம்பிள்ளை:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டை கள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.

    இதனால் இளம்பிள்ளை யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் நகராதபடி, நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஏற்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதி காரிகள், இன்று இளம்பிள்ளை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர்.
    • ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் ஒன்பது பேர் சுமார் 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள வீடுகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார்.

    அதன்பின்னர் இப்பகுதியில் வசித்து வந்த இருவர் நீதிமன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள உத்தரவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவிக்கு இணை ஆணையர் உத்தரவிட்டாராம்.

    இந்நிலையில், இன்று பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏழு வீடுகளுக்கும் பூட்டி சீல் வைத்தார்.இதனால் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதிர்ப்பையும் மீறி ஏழு வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இதன் பின்னர், புறப்பட்ட அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழுவின் தலைமை நிலைய செயலாளர் நீலவானத்துநிலவன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.இதன் பின்னர், அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்தனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    • கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்.
    • இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கோணமடுவு, குரால்நத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காவல்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு குப்புசாமி கூறியதாவது:-

    கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாமல், வாழ முடியாமல் தவித்து வருகிறோம். நாகராஜ் என்பவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

    இது குறித்து பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது.
    • ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி மற்றும் எம்.செட்டிப்பட்டி ஆகிய கிராம எல்லைக்கு உட்பட்ட பாப்பாங் காட்டூர், பஞ்சாங்கரடு பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இந்த பகுதியில் நாங்கள் பயன்படுத்தி வந்த ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    இதனால் நாங்கள் விளைவித்த பொருட்களை எடுத்துச் செல்ல முடிய வில்லை. பள்ளி குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் அவ சர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    சாலையை அளவீடு செய்து தார் சாலை அமைத்து தரும்படி பஞ்சா யத்து தலைவர், தாசில்தார், சப்-கலெக்டர், கலெக்டர், முதல்-அமைச்சரின் நேரடி முகவரி என 3 ஆண்டு களுக்கும் மேலாக மனுக்கள் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சேலம் வரும் முதல்-அமைச்சரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கவும், பள்ளி செல்லும் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பா மல் போராட்டத்தில் ஈடுப டும் நிலைக்கு அதிகாரிகளால் தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.
    • 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு ட்பட்ட அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களது குடியிருப்பின் அருகில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அத்து மீறி இடத்தை ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் மிரட்டல் விடு த்ததாகவும் கூறப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இடம் சம்பந்தமான பிரச்சனையை வருவாய்த்துறையில் புகார் அளியுங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
    • பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளும் அடங்கும். பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு உள்ள வணிக வளாகக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிது உதவிகரமாக உள்ளது.

    குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்ற னர்.பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சிலகடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புறப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
    • குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார்.

    சீர்காழி:

    சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அரியா–பிள்ளை குளத்தினை நடைபாதையுடன் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சுனக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி குளத்தினை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார். நகராட்சி ஆணையர் வாசுதேவனை தொடர்பு கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அரியாபிள்ளை குளம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றி மீட்கப்பட்டது.

    ௮௦ ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஏபி.மகாபாரதியை சீர்காழி நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர்.
    • இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நகராட்சி க்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்நிலையில் நகராட்சி சார்பில் நகராட்சி கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நோட்டீசு வழங்கினர். இதற்கு கடை காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இதை கண்டித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் சங்கம் மற்றும் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் அனைத்து வியா பாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் நகர மன்ற தீர்மானத்தினை கண்டித்தும் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடை களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இன்று காலை பு.புளியம்பட்டி பகுதியில் தினசரி மார்க்கெட்டு கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நகராட்சி கடைகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காமலாபுரம் கிராம சாலையை பலரும் ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடம் கட்டியுள்ளனர். அதனால், விவசாயிகள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை ஓட்டி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே செல்லும் வகையில் அகலமாக இருந்த சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது.

    இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று காமலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்விராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஓமலூர் தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில், ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அதனால், பாதிக்கப்படுவர்கள் என 84 பேர் கலந்துக்கொண்டனர். அப்போது பாதிக்கப்படும் பலரும் ஆக்கிரமிப்பை தாங்களே எடுத்துகொள்ள கால அவகாசம் கேட்டனர். மேலும், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களது வீடு எந்த வகையிலும் சாலையை பதிக்கவில்லை என்றும், தங்களுக்கு ஒரு வீடு மட்டுமே இருப்பதால், நாங்கள் வாழ வழியில்லை என்றும் கூறினர்.

    அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பலரும் முறையாக அளவீடு செய்யவில்லை என்று கூறினர். அப்போது பேசிய தாசில்தார் வள்ளமுனியப்பன், மீண்டும் அளந்து காட்ட அதிகாரிகள் தயாராக இருக்கிறோம். மேலும், அனைவருக்கும் வரைபடம் வழங்கப்படும். அதனால், நீங்கள் தனியார் சர்வேயர் வைத்துகூட அளந்து பார்த்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    மேலும், நீங்களே ஆக்கிரமிப்புகளை எடுத்துகொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்ட நாளில் முறையாக உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேரணை சாலை ஆக்கிரமிப்பு குறித்த சர்வே பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் வேலை செய்ய ஆட்கள் இல்லை.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து சர்வே செய்து அறிக்கை தாக்கால் செய்ய வருவாய்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து முள்ளிப்பள்ளம் கிராம பகுதிகளில் முதல் கட்ட சர்வே பணிகள் முடிந்தது. 2-ம் கட்டமாக குருவித்துறை சித்தாயிபுரத்தி லிருந்து மன்னாடிமங்கலம் வரை சர்வே செய்யும் பணியை வட்ட அளவை யாளர் சந்திரா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முபாரக், முத்துகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. ஆனால் உதவியாளர் பற்றாகுறை, நெடுஞ்சாலைதுறை பணியாளர் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியின்போது அளவு டேப் பிடிக்க மற்றும் எல்லை குறியீடு வேலை செய்ய ஆட்கள் இன்றி தொய்வு ஏற்பட்டு உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு சர்வே செய்யும் பணியை துரிதபடுத்தி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • விசாரணையின்போது குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது.
    • நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா? என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் பத்து மடங்கு மின்கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனு தாக்கல் செய்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசிற்கு இடைக்கால தடை விதிப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பிறகு இந்த பத்து மடங்கு மின் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா? என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

    • அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அகில பாரத அனுமன் சேனா தலைவர் தியாகராஜன் தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
    • திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

    அவினாசி : 

    அவினாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அகில பாரத அனுமன் சேனா தலைவர் தியாகராஜன் தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்திற்குட்பட்ட மேற்கு ரத வீதி பார்வதி மண்டபம் அருகில் உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தள்ளனர். ஏற்கனவே அந்த இடம் வருவாய்த்துறையினரின் விசாரணையில் உள்ளது. அதை பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். 

    ×