search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய நிலம்"

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வயல் வழியில் வெள்ளம் செல்கிறது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, ஒருநூறாம்வயல், கற்றுவா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், கனமழையும் பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.இதனால் ஆறுகள், கால்வாய்கள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பிரதான, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குமரியில் உள்ள பிரதான அணை களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1,சிற்றாறு -2 ஆகிய அணைகள் முழு கொள்ள ளவை எட்டி வருகிறது.மேலும் அதிக அளவில் வெள்ளம் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந் நிலையில் சிதறால் மலை கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை மரச்சீனி, தென்னை ஆகியவை மூழ்கியுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வயல் வழியில் வெள்ளம் செல்கிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
    • அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த விஜயமாம்பாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் நரசிம்மலு நாயுடு. கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அப்பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர்.

    இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து 130 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தோண்டி எடுக்கப்பட்ட முதியவர் உடல் பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
    • இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆமூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகில் ஆறு ஒன்று உள்ளது. இந்நிலை யில் ஆறுமுகம் தனது விவசாய நிலத்தின் அருகில் உள்ள ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.

    ஆறுமுகம் விவசாய நிலத்திற்கு பக்கத்து விவசா ய நிலத்தின் உரிமையாளர் கண்ணன். ஆறுமுகம் போ ட்ட போர் பக்கத்திலேயே கண்ணனும் போர் போட முயன்று ள்ளார். இதனால் ஆறுமு கம் கண்ணனிடம் சென்று நான் தான் இங்கு போர் போட்டுள்ளேன் இதன் அருகே நீ போர் போடாமல் கொஞ்சம் தள்ளி சென்று போர் போடு என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. 

    இதனையடுத்து விவசாய நிலத்தில் இருந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டனை ஆகிய 3 பேரையும் கண்ணன், அய்ய னார், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டன் ஆகி யோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கண்ணியம்மாள் திருவெ ண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகார் கொடு த்தார். புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்திகேயன், ஆறுமு கம் குடும்பத்தை தாக்கிய கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அய்யனார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய கண்ணன் மற்றும் கிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
    • விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது.
    • ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி மற்றும் எம்.செட்டிப்பட்டி ஆகிய கிராம எல்லைக்கு உட்பட்ட பாப்பாங் காட்டூர், பஞ்சாங்கரடு பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எங்கள் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகி றோம். 40 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இந்த பகுதியில் நாங்கள் பயன்படுத்தி வந்த ஓமலூர் - தாரமங்கலம் பிரதான சாலையுடன் இணைக்கும் வண்டிப்பாதையை, பாதையின் இருபுறமும் விவசாய நிலங்களுடன் சேர்ந்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.

    இதனால் நாங்கள் விளைவித்த பொருட்களை எடுத்துச் செல்ல முடிய வில்லை. பள்ளி குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் அவ சர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    சாலையை அளவீடு செய்து தார் சாலை அமைத்து தரும்படி பஞ்சா யத்து தலைவர், தாசில்தார், சப்-கலெக்டர், கலெக்டர், முதல்-அமைச்சரின் நேரடி முகவரி என 3 ஆண்டு களுக்கும் மேலாக மனுக்கள் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எனவே சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், சேலம் வரும் முதல்-அமைச்சரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஒப்படைக்கவும், பள்ளி செல்லும் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பா மல் போராட்டத்தில் ஈடுப டும் நிலைக்கு அதிகாரிகளால் தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜயகுமார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினருக்கு அது மரநாய் என்பது தெரிய வந்தது. இது அடுத்து மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது. இதனால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது. இதையடுத்து வனக் குழுவினர் அந்த மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வலை கொட்டலாம் காப்பு காட்டு பகுதியில் விட்டனர். 

    • சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்திட உள்ளது.
    • ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2022-23ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட உள்ளது.

    சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்க கூடியது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள் ,வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்பட்டு விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும்.

    ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும் .சூரிய மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,08,296 வீதம், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,26,263 வீதம் 10 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,52,879 வீதம், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.

    எனவே இந்த திட்டத்தில் பயன்பெற வன விலங்கினால் ஏற்படும் சேதாரங்களை தவிர்க்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை வனப்பகுதிகளுக்கு அருகில் விருப்பமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே-பொ) உடுமலைபேட்டை , யசோதா ராமலிங்கம் லேஅவுட், (செல்போன் எண் : 9865497731) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×