search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar fence"

    • சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்திட உள்ளது.
    • ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2022-23ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட உள்ளது.

    சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்க கூடியது. சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள் ,வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்பட்டு விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும்.

    ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும் .சூரிய மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,08,296 வீதம், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,26,263 வீதம் 10 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்தொகை ரூ.2,52,879 வீதம், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.

    எனவே இந்த திட்டத்தில் பயன்பெற வன விலங்கினால் ஏற்படும் சேதாரங்களை தவிர்க்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை வனப்பகுதிகளுக்கு அருகில் விருப்பமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே-பொ) உடுமலைபேட்டை , யசோதா ராமலிங்கம் லேஅவுட், (செல்போன் எண் : 9865497731) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×