search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical attack death"

    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சி கன்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் விஷ்வா (12) சூர்யா (9).

    இருவரும் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றனர். அப்போது பம்பு செட்டின் அறையில் அருகில் கீழே கிடந்த இரும்பு பைப்பை இருவரும் மிதித்தனர். அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வராததால் தேடிய பெற்றோர்கள் குழந்தை வயல்வெளியில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து போலீசார் உடலை கைப்பற்றினார்.

    இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பள்ளி செல்லும் சகோதர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் இன்னாச்சி (வயது38). எலக்ட்ரீஷியன். நேற்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடையடுத்து அவர் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக டிரான்ஸ்பாரம் அருகே மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இன்னாச்சி தூக்கி வீசப்பட்டார்.

    மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னாச்சியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேளச்சேரி:

    மேடவாக்கம், பாரதி முதல் தெருவை சேர்ந்தவர் தேவி (வயது56). இவர் தனது வீட்டின் முன்பு உள்ள குடிநீர் மோட்டார் சுவிட்ச்சை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தேவி பலியானார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அரிமளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள இடையன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் முத்து (வயது 44). விவசாயியான இவர் நேற்று வீட்டில் டி.வி.யை இயக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    மாரமங்கலத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பை குட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி பலியான கோவிந்தராஜிக்கு சசிகலா (31) என்ற மனைவியும், 11 மற்றும் 9 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.
    காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சங்கந்திடலை சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கழனிவாசல் நேதாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த வீட்டின் போர்வெல்லுக்கான மின்மோட்டார் வயர் இணைப்பினை கவனக்குறைவால் தொட்டுவிட மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    அசாம் மாநிலம் காச்சார் மாவட்டம் காந்திகாரம் தாலுகா கும்பூர் பக்கமுள்ள உத்தர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கவுரக்கா கோலா (வயது 55). இவர் ஓசூர் பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி கவுரக்கா கோலா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் அரவிந்த் (வயது 18). துரைராஜ் சரக்கு ஆட்டோவில் ஓட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இதற்கு அரவிந்தன் துணையாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றிற்கு மின்மோட்டாரை இயக்கி அரவிந்த் குடிநீர் வினியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வயல் பகுதிக்கு சென்று ஆட்டிற்கு மரக்கிளைகளில் இருந்து பசுந்தழைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கு மேலே சென்ற மின் கம்பியில் மரக்கிளை விழுந்து மரக்குச்சி வழியாக மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீஞ்சூர் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (34). இவர் இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டில் சுவிட்ச் போட்ட போது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் உள்ளவர்கள் மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ள பெத்தகுள்ளுவை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் சதீஷ் (வயது 20). விவசாயி. இவர் நேற்று காலை தனது தக்காளி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் வவ்வால்கள் அமர்ந்திருந்தன. அவை ஒன்றோடு ஒன்று உரசியதில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்தது. இதை கவனிக்காத சதீஷ் அந்த மின்சார வயரை மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×