நடைபயிற்சி சென்ற அரசு வக்கீல் மின்சாரம் தாக்கி பலி

தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
நடைபயிற்சி சென்ற அரசு வக்கீல் மின்சாரம் தாக்கி பலி
Published on

அம்பத்தூர்:

கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com