என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvennainallur"
- மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
- சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் ஊராட்சி துலுக்கபாளையம் கிராமத்தில் கிழக்குத் தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் சாலையிலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சேற்றின் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள இந்த தெருவில் உரம் போட்டு நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சாலையை சீரமைக்க விட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக நீச்சல் அடிக்கும் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), விவசாயி. இவருக்கு ஜெயந்தி (40) என்ற மனைவியும், 3 பெண்குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை வழக்கம்போல் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவி ஜெயந்தியிடம் சாப்பாடு தருமாறு கேட்டார். அதற்கு ஜெயந்தி தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால் சமையல் செய்யவில்லை என்று கூறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏறபட்டது. இதில் மனமுடைந்த கண்ணன் வீட்டில்இருந்து வெளியே சென்றார்.
பின்னர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். திருவெண்ணைநல்லூர் சுடுகாட்டு பகுதிக்கு சென்று படுத்துக்கொண்டார். இரவு நீண்டநேரமாகியும் கண்ணன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கண்ணன் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி.கொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19).
இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரமேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் ரமேசுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. #Tamilnews
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்களம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை கோயம்பேட்டில் ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயலலிதா(வயது 25). இவர்களுக்கு கவுதமன்(3½) என்ற மகனும், பூமிகா(1) என்ற மகளும் உள்ளனர்.
ஜெயலலிதா தனது குழந்தைகளுடன் மேலமங்களத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மேலமங்களத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவதன்று விக்னேசை வேலைக்கு செல்லும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதனால் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த விக்னேஷின் உறவினர்களும் ஜெயலலிதாவை திட்டினர்.
இதனால் மனம் உடைந்த ஜெயலலிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. ஜெயலலிதா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அவரை மீட்டனர். இதில் ஜெயலலிதாவிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஜெயலலிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






