திருவெண்ணைநல்லூர் அருகே சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்

சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்
Published on

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் ஊராட்சி துலுக்கபாளையம் கிராமத்தில் கிழக்குத் தெரு, பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் சாலையிலேயே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சேற்றின் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சேறும்-சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக உள்ள இந்த தெருவில் உரம் போட்டு நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சாலையை சீரமைக்க விட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக நீச்சல் அடிக்கும் போராட்டம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com