வென்றஅள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வென்றஅள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வென்றவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை லட்சுமணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவரது தாயாரின் வளர்ப்பில் இருந்து வந்தார் இவர் குடும்ப பாரத்தை குறைக்கவும், பள்ளிப்படிப்பிற்கும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த மைனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி தாக்கியதில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழந்தார்.

நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தாயார் தேடி சென்று அங்கு பார்த்த போது விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்தன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனந்தனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருந்த போதும், குடும்ப சுமையை குறைக்க கூலி வேலைக்கு சென்று அவரது தாயாருக்கு பெரும் உதவியாக இருந்த சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com