மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜெக்காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). இவருடைய மனைவி மாதவி (50) தம்பதியின் மகன் ஹரிகிருஷ்ணா ( 30) நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வெங்கடேஷ் குளிக்கச் சென்றார்.

குளியல் அறையில் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கியது. அவரது சத்தம் கேட்ட அவருடைய மனைவி மற்றும் மகன் இருவரும் ஓடி சென்று அவரை காப்பாற்ற கையை பிடித்து இழுத்தனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் குளியல் அறையிலேயே துடித்து இறந்தனர்.

அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். வீட்டுக் கதவு நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் குளியல் அறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com