search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pool"

    • கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் முடிவடையவில்லை.
    • குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூரில் பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு குளம் சுற்று சுவர் அமைத்து நான்கு கரைகளிலும் பூங்கா அமைக்கும் பணி ரூ. 117 லட்ச மதிப்பில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    வடக்கு குளத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் குளத்தில் தண்ணீர் திறந்து விடுவது தாமதமாகி வருகிறது அதனால் குளத்தில் பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறட்சியின் காரணமாக வடக்கு குளத்தை சுற்றியுள்ள குடிநீர் ஆதாரங்கள் செயல் இழக்கும் அபாயம் உள்ளதால் வடக்கு குளத்தில் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து குளத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
    • படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.

    இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • அடையாளம் காண முடியாததால் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
    • அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை நகரம் 4-ம் நம்பர் புதுத்தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சைநிற கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார்.

    இவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் கடந்த 3 தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
    • விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து

    விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பிரசாந்த்(வயது 16) பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.
    • போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லையில் உள்ள முந்திரி தூசி கம்பெனியில் தூசி அல்லும்வேலை செய்து வந்தார்.    வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளத்தை சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து 9 -வது வார்டில் தாடளான் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை கலைஞர் நகர்புற

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குளத்தை சீரமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

    குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார் குளம், நரியன் குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1432-ம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை எடுக்க விரும்புவர்கள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட வேண்டும். அந்த அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குளத்தில் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியது.
    • அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காட்டில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது.

    இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது.

    இதையொட்டி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த குளத்தில் திருட்டுத்தனமாக ஒரு சிலர் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும், அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

    இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், இந்த குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் குளத்தில் இறங்க வேண்டாம் என குளத்தின் அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    தொடர்ந்து, இந்த குளத்தை கண்கா ணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
    • குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார்.

    சீர்காழி:

    சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அரியா–பிள்ளை குளத்தினை நடைபாதையுடன் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சுனக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி குளத்தினை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார். நகராட்சி ஆணையர் வாசுதேவனை தொடர்பு கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அரியாபிள்ளை குளம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றி மீட்கப்பட்டது.

    ௮௦ ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஏபி.மகாபாரதியை சீர்காழி நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • நாட்டார்மங்கலம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.
    • குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கோடை காலங்களில் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த நிலையில் குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள் இறங்கும் போது படிகட்டுகள் இடிந்து விழுந்து காயமடைகின்றனர்.

    மேலும் அருகில் நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் குளத்திற்கு செல்லும் போது தவறுதலாக எதேனும் உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது.

    மேலும் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    இதனை பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பெரியகுளத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.

    ×