பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

பிரசாந்த்(வயது 16) பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர்.
பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லையில் உள்ள முந்திரி தூசி கம்பெனியில் தூசி அல்லும்வேலை செய்து வந்தார்.    வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரி குளத்தில் மதியம் 2 மணி அளவில் நீரில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com