பல்லடம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு ட்பட்ட அல்லாளபுரத்தில் ஒரு தரப்பினர் அரசு வழங்கிய இடத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களது குடியிருப்பின் அருகில் வசித்து வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அத்து மீறி இடத்தை ஆக்கிரமித்து முள் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வர்களிடம் மிரட்டல் விடு த்ததாகவும் கூறப்படு கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இடம் சம்பந்தமான பிரச்சனையை வருவாய்த்துறையில் புகார் அளியுங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com