என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட காட்சி.
இளம்பிள்ளையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்
- இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டைகள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இளம்பிள்ளை:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டை கள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.
இதனால் இளம்பிள்ளை யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் நகராதபடி, நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஏற்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதி காரிகள், இன்று இளம்பிள்ளை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






