search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    உடுமலை பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    • வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
    • பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளும் அடங்கும். பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு உள்ள வணிக வளாகக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிது உதவிகரமாக உள்ளது.

    குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்ற னர்.பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சிலகடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புறப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×