என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு-அனுமன் சேனா புகார்
- அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அகில பாரத அனுமன் சேனா தலைவர் தியாகராஜன் தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
அவினாசி :
அவினாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அகில பாரத அனுமன் சேனா தலைவர் தியாகராஜன் தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்திற்குட்பட்ட மேற்கு ரத வீதி பார்வதி மண்டபம் அருகில் உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தள்ளனர். ஏற்கனவே அந்த இடம் வருவாய்த்துறையினரின் விசாரணையில் உள்ளது. அதை பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இதனை திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Next Story






