search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dispute"

    • 2 தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வர வேண்டுமென கூறி அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ் நேற்று புறப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால், இந்த பஸ் மாற்று பாதையில் சென்றது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பஸ் நேற்று மாலை பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி அருகில் சென்றது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ், கள்ளக்குறிச்சி பஸ்சின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், தனியார் பஸ் ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், பயணிகளை இறக்கிவிட்டு பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வரவேண்டுமென கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து இன்று காலை 2 தனியார் பஸ் ஊழியர்கள் பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாதென எச்சரித்து அனுப்பினார்கள்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யாறு ஒன்றியம் விண்ணவாடி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை ஆகியன அமைக்கப்பட்டு இருந்தன.

    அதேப் போல அரும்பருத்திக் கிராமத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடைக் கட்டடமும் கட்டப்பட்டது. இவைகளின் திருவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமைத் தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றியக் கவுன்சிலர் வி.ஏ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு இரண்டு தார்சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    பின்னர் செய்யாறு கல்வி மாவட்டம் பள்ளி அரசு மேநிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும், நெடும்பிறை அரசு பயிலும் மாணவர்கள் 45 என மொத்தம் 108 பேருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் கே.மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், தீபா ராபர்ட், நகர மன்ற உறுப்பினர்கள் ரவி, பேபி ராணி பாபு, திமுக நிர்வாகிகள் அன்பழகன், மா.கி வெங்கடேசன், ஜே.ஜே. ஆறுமுகம், சுந்தரேசன், பார்த்தீபன் தயாளன், அருள், சக்திவேல், துரை, கருணாநிதி, பா.க. மணிவ ண்ணன், அசோக், மங்கலம் பாபு, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த வர்கள் அரவிந்தன் (வயது 19), இவரது நண்பர்கள் கோகுலகிருஷ்ணன் (19), சாய் பூசன் (19).

    இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் பிரம்மதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வெம்பாக்கம் பொம்மாத்தான் கோவில் அருகே புத்தனூரை சேர்ந்த மோகன் (37), சரவணன் (45), ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை மோகனம், சரவணனும் வழிமடக்கி தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் வாலிபர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அரவிந்தனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பாபு என்பவர் என் வாலிபர்களை தாக்குகிறாய் என்று கூறி தகராறு தடுத்து நிறுத்தி உள்ளார்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த அரவிந்தனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

    இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன், சரவணனை கைது செய்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
    • இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆமூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகில் ஆறு ஒன்று உள்ளது. இந்நிலை யில் ஆறுமுகம் தனது விவசாய நிலத்தின் அருகில் உள்ள ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.

    ஆறுமுகம் விவசாய நிலத்திற்கு பக்கத்து விவசா ய நிலத்தின் உரிமையாளர் கண்ணன். ஆறுமுகம் போ ட்ட போர் பக்கத்திலேயே கண்ணனும் போர் போட முயன்று ள்ளார். இதனால் ஆறுமு கம் கண்ணனிடம் சென்று நான் தான் இங்கு போர் போட்டுள்ளேன் இதன் அருகே நீ போர் போடாமல் கொஞ்சம் தள்ளி சென்று போர் போடு என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. 

    இதனையடுத்து விவசாய நிலத்தில் இருந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டனை ஆகிய 3 பேரையும் கண்ணன், அய்ய னார், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டன் ஆகி யோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து கண்ணியம்மாள் திருவெ ண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகார் கொடு த்தார். புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்திகேயன், ஆறுமு கம் குடும்பத்தை தாக்கிய கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அய்யனார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய கண்ணன் மற்றும் கிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • ஜாமீனில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
    • சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் துலுக்கவெளி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல் (வயது 30).

    கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த குடும்பத் தகராறில் தனது தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டி கொலை செய்தார்.

    இதனால் சிறையில் அடைக்கப்பட்ட சக்தி வேலை பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக நிபந்தனை ஜாமினில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 1ம் தேதி பரோலில் வந்தவர் நேற்று தேவனாம் சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது மாமி யாருக்கும், மனைவி அபிநயாவுக்கும் (23) தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அபிநயாவை ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    • ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45).

    விவசாயி. இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் குணசேகரின் ஆடு அதே பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் குணசேகரனுக்கும், முத்துசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முத்துசெல்வனை தேடி வருகிறார்கள்.

    இது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த பாலையூர் அருகே கோமல் கிராமத்தில் ஊராட்சி தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்தபோது கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாக கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், மண்டபம் கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு கிராமமக்கள் கணக்கு கேட்டதாகவும், அதற்கு பாலசுப்பிரமணியம் உரிய கணக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராமமக்கள் நீக்கியுள்ளனர்.

    இதனால் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவரது வீட்டின் கொல்லையில் நேற்று முன்தினம் மண் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கோமல் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (43) ஆகியோர் தட்டிக்கேட்டனர். பின்னர், இதுகுறித்து பாலையூர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் 15 பேர் நேற்று அரிவாள், உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றை கொண்டு செல்வராஜ், குணசேகர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த உறவினர்கள் அனைவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    இந்நிலையில், பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தாக்குதலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன், அவரது மகன் ராம்குமார் மற்றும் ரஞ்சித், காமராஜ் ஆகிய 4 பேர் மீது பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார்.
    • தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள்(வயது 54). இவர்களது 2 குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆறுமுகம் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் வீட்டை விற்பதற்காக பத்திரம் கேட்டு வேலம்மாளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அரிவாளால் வேலம்மாளின் தலையில் வெட்டினார்.

    உடனே ரத்தம் சொட்ட சொட்ட வேலம்மாள் அங்கிருந்து ஓடிச்சென்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஆத்திரம் தீராத ஆறுமுகம் வீட்டில் இருந்த பீரோ மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். தகவல் அறிந்து சுத்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுகுடிப்பதற்காக வீட்டை விற்பதற்கு பத்திரம் கேட்டு, கிடைக்காத ஆத்திரத்தில் மனைவியை வெட்டியதோடு சொந்த வீட்டுக்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.
    • கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பொன்மலை நகரைச் சேர்ந்தவர் சரண் (வயது22). கூலித்தொழிலாளி.

    ஜெகதேவி எம்.ஜி.ஆர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவை பார்ப்பதற்காக சரண் நேற்று கோவிலுக்கு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஆனந்த் (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் திருவிழாவிற்கு வந்தனர்.

    அப்போது 3 பேரும் சேர்ந்து சரணிடம் ஒலிபெருக்கியில் சினிமா பாடல் போடுமாறு கூறியுள்ளனர்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சரணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனை பார்த்த சரண் தரப்பினரைச் சேர்ந்த நவீன்குமார் (24), வேலாயுதம் (24), சந்தோஷ் குமார் (25), சூர்யா (21), பத்மநாபன் (21), ரவி, சந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரும் சேர்ந்து மணிகண்டன் தரப்பினரை திருப்பி தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போர்களமாக காட்சியளித்தது.

    இதுகுறித்து சரண் பர்கூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், ஆனந்த், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோன்று மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.

    கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடைக்கு சென்ற, போதை ஆசாமிகள் இருவர் தகராறில் ஈடுபட்டனர்.
    • பட்டப்பகலில், ரவுடித்தனம் செய்த போதை ஆசாமிகள் குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர், இடுவாய், பாரதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி இவரது கடைக்கு சென்ற, போதை ஆசாமிகள் இருவர் தகராறில் ஈடுபட்டனர். கடையில் மாமூல் பணம் தர வேண்டும் என்று கூறி அடாவடி செய்தனர்.

    பணம் தர மறுத்த பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தனர். கற்களை கடை மீது வீசினர். தடுக்க வந்த பெண்ணை கீழே தள்ளி விட்டனர். பட்டப்பகலில், ரவுடித்தனம் செய்த போதை ஆசாமிகள் குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து

    இதுதொடர்பாக, சூர்யா, (22), சூர்யபிரகாஷ், (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் மீது, அடிதடி, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது‌.

    என்.ஜி.ஓ.காலனி:

    நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலமுருகன் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பாலன், குமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பர்னிச்சர் கடையில் இடலாக்குடி நெடுந்தெருவை சேர்ந்த கணேஷ் (39) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து இரவு பர்னிச்சர் கடையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு பாலன், கணேஷ் இருவரும் பர்னிச்சர் கடையில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்தினர். கணேசின் நண்பர் பட்டாரியர் நெடுந்தெருவை சேர்ந்த ஜெகதீசனும் அங்கு வந்தார். 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது பர்னிச்சர் கடையில் வேலை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பாலன் தான் அதிக வேலை செய்வதாகவும் கணேஷ் சோம்பேறியாக உள்ளதாகவும் கூறினார்.

    இது கணேசுக்கும் அவரது நண்பர் ஜெகதீசுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலன் திடீரென ஜெகதீசை சரமாரியாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் ஜெகதீஷ் சேர்ந்து பாலனை கம்பால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலனையும் படுகாயத்துடன் நின்று கொண்டிருந்த ஜெகதீசையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜெகதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் ஜெகதீஷ், கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    பாலன் கொலை செய்யப்பட்ட தகவல் தச்சநல்லூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். குடிபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.
    • கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்குபட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பி னருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதரப்பினர் ஒப்புதலின்படி கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தொப்ப லாக்கரை கிராமத்தில் உள்ள கோவிலில் பரளச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் டிராக்டரரை வைத்து போலீஸ் காரர்களை மோத முயன்றதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்கா ரர் பாண்டித்துரை கொடுத்த புகாரின் பேரில்அந்த கிரா மத்தை சேர்ந்த கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×