என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
- ஜாமீனில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
- சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார்.
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் துலுக்கவெளி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல் (வயது 30).
கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த குடும்பத் தகராறில் தனது தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டி கொலை செய்தார்.
இதனால் சிறையில் அடைக்கப்பட்ட சக்தி வேலை பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக நிபந்தனை ஜாமினில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி பரோலில் வந்தவர் நேற்று தேவனாம் சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது மாமி யாருக்கும், மனைவி அபிநயாவுக்கும் (23) தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அபிநயாவை ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.






