search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi high court"

    ஏர் செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தன் மீது சி.பி.ஐ. கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று டெல்லி கோர்ட்டில் ப. சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #aircelmaxiscase #pchidambaram
    புதுடெல்லி:

    மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது.

    சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, ப. சிதம்பரம் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் நாளை (26-ந் தேதி) வரை கைது செய்யப்படாமல் இருக்க சி.பி.ஐ. கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவின் மீது சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அவர் மீது சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, “ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

    அதுமட்டுமின்றி, “அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்து உள்ள கால வரையறைக்குள் விசாரித்து முடிப்பது மிகவும் சிரமம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யின் பதில் மனு மீது ப.சிதம்பரம் தரப்பில் சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் பதில் மனுவை வக்கீல்கள் பி.கே. துபே, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    அதில், “ சி.பி.ஐ. கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை. இந்த வழக்கில் என்னை காவலில் வைத்து விசாரிக்க தேவை இல்லை. எல்லாமே ஆவண ரீதியிலான ஆதாரங்கள்தான். அவை எல்லாமே சி.பி.ஐ. வசம்தான் உள்ளன. வழக்கின் ஆதாரங்களை, சாட்சியங்களை நான் கலைத்து விடுவேன் என்று கூறுவதற்கு சி.பி.ஐ. எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை” என கூறப்பட்டுள்ளது. #aircelmaxiscase #pchidambaram
    42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. #DelhiHighCourt #16Policemen

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987-ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது அங்குள்ள ஹாசிம்பூரா பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் 42 பேர், போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள், கால்வாயில் வீசப்பட்டன. இது ஹாசிம்பூரா படுகொலை என அழைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக 19 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி திஸ்கஸாரி கோர்ட்டு விசாரித்தது. 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.

    முடிவில் 16 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, விடுதலை செய்து 2015-ம் ஆண்டு அந்த கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தது. கடந்த மாதம் 6-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும், அங்கு விடுதலை செய்யப்பட்ட 16 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட போலீசார் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர்.

    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.



    இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு எடுத்துள்ளது. இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #inxmediacase

    புதுடெல்லி:

    காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரது பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை அவரது கைதுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இன்று வரை அவரது கைதுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி முப்தா குப்தா உத்தரவிட்டார். #PChidambaram #inxmediacase

    ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #CBI #CVC #CBISpecialDirector #RakeshAsthana #DelhiHighCourt
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

    இந்த நிலையில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை ராகேஷ் அஸ்தானா குழுவினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் மொயின் குரேஷியுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சி.பி.ஐ.யின் சந்தேகப்பார்வை விழுந்தது.



    இந்த வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என மத்திய மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    ஆனால் இதில் அதிரடி திருப்பமாக சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என கூறி உள்ளார்.

    அந்தப்புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

    முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.

    இது தொடர்பான சி.பி.ஐ. மனுவை நீதிபதி சந்தோஷ் சினேகி மான் விசாரித்து, தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதற்கு மத்தியில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்தார். அவர், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ., சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ஏ.கே. சர்மா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

    மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி நஜ்மி வாஜிரி 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் ராகேஷ் அஸ்தானா விவகாரத்தில் தற்போதைய நிலை தொடரவும், அவரை கைது செய்வதில் இருந்து இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். 
    முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiHC #TripleTalaq
    புதுடெல்லி:

    முத்தலாக் விவாகரத்து முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது.  இதையடுத்து முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மக்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் பாஜகவுக்கு போதிய பலமின்மை காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    எனவே, முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகித் ஆசாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி காமேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



    முத்தலாக் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று ஒருமுறை உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதால், அந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  #DelhiHC #TripleTalaq
    பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #PetrolDiesel #PetrolPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.



    இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #AIADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் ஏற்கனவே சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. அவர்களின் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் வாதாடினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் விஸ்வநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஸ்வநாதன் தன்னுடைய வாதத்தில், சசிகலா உள்ளிட்டோர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கட்சியின் அன்றாட நடைமுறையில் எந்த உரிமையும் கிடையாது. எனவே அவர்கள் கட்சியின் மீதும், சின்னத்தின் மீதும் எந்த உரிமையும் கோர முடியாது என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #AIADMK #DelhiHighCourt

    அதிமுகவின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. #ADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

    இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், 3 வாரத்துக்குள் பதில் அளிக்கப்பட்டவுடன், அடுத்த 4 வார காலத்துக்குள் அதனை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்,  ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர். #ADMK #DelhiHighCourt
    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை செய்கிறது. #AIADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.



    நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு வக்கீல் ஆஜர் ஆனார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #AIADMK #DelhiHighCourt
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் உயர்த்தியோ, குறைத்தோ வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து உள்ளது.



    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt 
    டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 111 பயணிகளுடன் பாகிஸ்தானுக்கு கடத்திய 2 காலிஸ்தான் தீவிரவாதிகளை டெல்லி உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. #DelhiHC
    புதுடெல்லி:

    பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு காலிஸ்தான் தீவிரவாதிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த கோரிக்கைக்காக கடந்த 1981-ம் ஆண்டு பிந்த்ரன் வாலேயின் தல்கல்சா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 111 பயணிகளுடன் பாகிஸ்தானின் லாகூருக்கு கடத்தி சென்றனர். 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

    இந்த வழக்கில் 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் தேஜிந்தர்பால்சிங், சத்னம் சிங் ஆகியோர் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர்.

    கைதான 2 பேருக்கும் பாகிஸ்தான் கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து 1997-ம் ஆண்டு தேஜிந்தர் பால்சிங்கும், 1999-ம் ஆண்டு சத்னம் சிங்கும் இந்தியா திரும்பினர்.

    அவர்கள் மீது டெல்லி கோர்ட்டிலும் விமான கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. தாங்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் தண்டனை அனுபவித்து விட்டதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒரே குற்றச்சாட்டுக்கு இரு முறை தண்டனை அனுபவிக்க முடியாது என்று வாதிட்டனர்.

    இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி அஜய்பாண்டே விசாரித்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இருவரும் பாகிஸ்தானில் தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் டெல்லி போலீசாரால் நிரூபிக்கப்படாததாலும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். #DelhiHC
    ×