என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auditor gurumurthy"

    • நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துது.
    • அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.

    அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், சமாதான நடவடிக்கையாக ராமதாஸை அன்புமணி இன்று சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசாமல் அன்புமணி அங்கிருந்து கிளம்பினார்.

    இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தனர்.

    ராமதாஸ் அழைப்பின் பெயராலேயே சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் அக்கட்சிக்கு மட்டுமில்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.

    தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பியுள்ளார். ஆனால் அன்புமணியின் வற்புறுத்தலால் தான் பாமக பாஜக கூட்டணி ஏற்பட்டது என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். பாமக - பாஜக கூட்டணி ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவை ஏற்படுத்தியது.

    2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கூட்டணியை பொறுத்தவரை பாமகவுக்கு 3 வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று திமுக கூட்டணி இல்லையென்றால் அதிமுக கூட்டணி. இன்னொருபக்கம் விஜயின் த.வெ.க.வுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளதாலும், அக்கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதாலும், த.வெ.க. முதல்முறையாக தேர்தலை சந்திப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணியில் தான் பாமக இணையும் என்று கூறப்படுகிறது.

    அன்புமணி ஆசைப்படும் பாஜகவும் ராமதாஸின் விருப்பமான அதிமுகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், அன்புமணி - ராமதாஸை சமாதானப்படுத்தி பாமகவை ஒன்றிணைக்கவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைக்கவும் தான் சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாஸை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

    இதனிடையே வரும் 8 ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வரும் நிலையில் ராமதாஸ் - ஆட்டிட்டார் குருமூர்த்தி சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    • தமிழிசை இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
    • சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.

    சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குருமூர்த்தி உடனான ஆலோசனையின்போது அமித்ஷா உடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.

    • பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
    • சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது.

    சென்னை:

    துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது.

    விஜய் அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். தி.மு.க.வுக்கும், தி.மு.க. ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும். இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

    தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சிதான். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அ.தி.முக. தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது.

    அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

    எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர்தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021-ல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.

    பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களையும் இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளையும் இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும்தான்.

    சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.

    பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக்கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று அவர் கூறினார்.

    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.



    இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு எடுத்துள்ளது. இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தை அடுத்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது.


    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2-வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பா.ஜ.க. ஆதரவாளரும், ஆடிட்டர் குருமூர்த்தி வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவர் சிவக்குமார்  ஜூன் 25 , மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி 26-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
     
    “தனது கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது” என்றும், “சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்”, என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.#Rajinikanth #RajinikanthPolitical #jayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ‘தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பா.ஜ.க.வுடன் சேர்ந்து ரஜினிகாந்த் நிரப்ப முடியும்’ என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கிறாரே?

    பதில்:- ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகிவிடக்கூடாது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது பழமொழி. பாவம், ரஜினிகாந்த் சும்மா இருக்கிறார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி ஊதி கெடுத்துவிட வேண்டாம்.

    தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அப்படி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, வெற்றிடம் எனும் நிலை எப்படி இருக்க முடியும்?

    ஆடிட்டர் குருமூர்த்தி நேரடியாக சொன்னாலும் சரி, சூசகமாக சொன்னாலும் சரி தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தான் ஆட்சி கட்டிலில் அமரும், கோலோச்சும். கருத்துகளை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஆனால் மக்கள் தான் தீர்ப்பு வழங்குபவர்கள். கனவிலும், கற்பனை உலகத்திலும் இருப்பவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.

    கேள்வி:- காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் 600 பக்க தீர்ப்பை யாரும் படிக்காமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று குருமூர்த்தி கூறியிருக்கிறாரே?



    பதில்:- ஆளும் அரசே போராடுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி. மாநில உரிமைக்காக அ.தி.மு.க. அரசு என்றைக்குமே போராடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உள்ளங்கை நெல்லிக்கனி போல தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே தான் மத்திய அரசுக்கு எல்லா விதத்திலும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறோம்.

    கேள்வி:- குழந்தை திருட்டு என கருதி கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சென்னை பெண்மணி இறந்திருக்கிறாரே?

    பதில்:- ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது தான் சட்டத்தின் மாண்பு. பாலியல் தொல்லைகள் உள்பட குழந்தைகள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதே மக்கள் மற்றும் அரசின் கடமையாகும். எனவே பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து இதுபோல செயல்களில் ஈடுபடக்கூடாது. யார் மீதாவது சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். #Rajinikanth #RajinikanthPolitical #jayakumar
    ×