என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிட்டர் குருமூர்த்தி"
- பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது.
- அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன்.
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றியது தொடர்பாக யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மேலிடம் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை மாற்றப்பட்டு அரசியல் யுக்தி என்று ஆடிட்டர் குரூமூர்த்தி பேசியுள்ளார்.
'துக்ளக்' நாளிதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-
அண்ணாமலை பொறுத்தவரை அது பா.ஜ.க.வின் முடிவு. அண்ணாமலையும், பா.ஜ.க.வும் சேர்ந்து தான் முடிவு எடுத்துள்ளார்களே தவிர அண்ணாமலையை கலக்காமல் எதையும் எடுக்கலை. காரணம் என்னவென்றால் பா.ஜ.க.வால் மட்டும் தனியாக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்கிற நிலைமை இருப்பதினால்.
எடப்பாடி எந்த விஷயத்திலும் பா.ஜ.க.வோடு நெருங்ககூடாது என்று 2024-ல் அவர் எடுத்த முடிவை அவர் மாற்றிக்கொண்டு பா.ஜ.க. ஒத்துழைக்க வந்திருப்பதானால் தான் இன்னிக்கு தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. எல்லாமே ஐடிலிசம் கிடையாது. பா.ஜ.க. தனியாக நின்று 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 10 ஆண்டு தி.மு.க. இருக்கும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்ள முடியாது.
தி.மு.க. போயே ஆக வேண்டும் என்றால் அதற்கு உண்டான யுக்திகளை தயார்படுத்த வேண்டும். அமித்ஷாவை விட இதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014-ல் மகாராஷ்டிரா தேர்தலின் போது உத்தவ் தாக்கரே என்கிட்ட போன் செய்து கேட்கிறார். அமித்ஷா எங்க இருக்காரு சார் என்னால பார்க்கவே முடியலை சார் என்று. அப்போ மாட்டுங்காவில் ஒரு சின்ன வீட்டில் இருந்தார் அந்த சமயத்தில். அங்கிருந்து தான் யுக்திகளை கையாண்டு பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது. அதனை அப்படியே மாத்தினார் அமித்ஷா. இன்றைக்கு பா.ஜ.க. மகாராஷ்டிராவை கைப்பற்றி இருக்கிறது என்றால் அன்னிக்கு அவர் எடுத்த யுக்தி. அதனால் அவருக்கு தெரியும். சில பேருக்கு அந்த அஸ்ட்ராலானி என்று கூறுவார்கள். அதாவது எல்லாவிதமான திறமையும் இருக்கும். அந்த மாதிரி திறமை உள்ளவர். தமிழ்நாட்டை கையில் எடுத்து இருக்கார். நம்பிக்கையுடன் இருங்கள். அண்ணாமலையும் அவருக்கு ஒத்துழைப்பார். அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன். அதனால அண்ணாமலைக்கு எதிராக ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு பேசுவது தவறு என்று கூறினார்.
- நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துது.
- அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமாதான நடவடிக்கையாக ராமதாஸை அன்புமணி இன்று சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசாமல் அன்புமணி அங்கிருந்து கிளம்பினார்.
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தனர்.
ராமதாஸ் அழைப்பின் பெயராலேயே சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் அக்கட்சிக்கு மட்டுமில்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பியுள்ளார். ஆனால் அன்புமணியின் வற்புறுத்தலால் தான் பாமக பாஜக கூட்டணி ஏற்பட்டது என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். பாமக - பாஜக கூட்டணி ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கூட்டணியை பொறுத்தவரை பாமகவுக்கு 3 வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று திமுக கூட்டணி இல்லையென்றால் அதிமுக கூட்டணி. இன்னொருபக்கம் விஜயின் த.வெ.க.வுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளதாலும், அக்கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதாலும், த.வெ.க. முதல்முறையாக தேர்தலை சந்திப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணியில் தான் பாமக இணையும் என்று கூறப்படுகிறது.
அன்புமணி ஆசைப்படும் பாஜகவும் ராமதாஸின் விருப்பமான அதிமுகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், அன்புமணி - ராமதாஸை சமாதானப்படுத்தி பாமகவை ஒன்றிணைக்கவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைக்கவும் தான் சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாஸை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே வரும் 8 ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வரும் நிலையில் ராமதாஸ் - ஆட்டிட்டார் குருமூர்த்தி சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- தமிழிசை இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
- சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.
சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குருமூர்த்தி உடனான ஆலோசனையின்போது அமித்ஷா உடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.
- பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
- சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது.
சென்னை:
துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது.
விஜய் அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். தி.மு.க.வுக்கும், தி.மு.க. ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும். இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சிதான். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அ.தி.முக. தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது.
அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர்தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021-ல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.
பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களையும் இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளையும் இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும்தான்.
சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.
பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக்கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று அவர் கூறினார்.






