என் மலர்

  நீங்கள் தேடியது "PIL"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனியாருக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க அரசின் சில துறைகளுக்கு அதிகாரமளித்த நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #SCnotice #PIL
  புதுடெல்லி:

  உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம்  20-12-2018  அன்று அறிவிக்கை வெளியிட்டது.

  மத்திய உள்துறை வழங்கிய இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

  இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை கைபேசிகளுக்கும் பொருந்தும் வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

  10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

  தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

  மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் 25-12-2018 அன்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

  பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

  எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தினார்.  இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. இவ்விவகாரத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #SC #SCnotice #PIL 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #PIL
  புதுடெல்லி:

  பல்வேறு வேலைகள் காரணமாக நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு வரும் பலர், சுத்தமின்மை காரணமாக பொது கழிப்பறைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

  இந்நிலையில், வழக்கறிஞர் அன்ஷுல் சவுத்ரி என்பவர், பொது கழிப்பறை அடிப்படை உரிமை எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தொடர்ந்தார். அந்த மனுவில், சுத்தமான பொது கழிப்பறை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். 

  இதை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரரை கண்டித்ததுடன், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளை போடவேண்டாம் எனவும் மனுதாரர்ருக்கு அறிவுறுத்தியது. #SupremeCourt #PIL
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய உளவுத்துறையை சேர்ந்த 10 அமைப்புகள் தனிநபர்களின் கணினி, கைபேசிகளை உளவுபார்க்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. #PILinSC #govtmove #interceptcomputer
  புதுடெல்லி:

  மத்திய உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைபொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது.

  மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

  இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

  10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

  தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

  மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

  பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

  எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #PILinSC #govtmove #interceptcomputer
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். #SupremeCourt #MeToo
  புதுடெல்லி:

  சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம், புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாலியல் புகார்களுக்கு ஆளாவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

  இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அப்படி புகார் தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர் எம்.எல்.சர்மா நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt
  புதுடெல்லி:

  பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் உயர்த்தியோ, குறைத்தோ வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

  இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt 
  ×