search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam"

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது
    • நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மட்டும் அல்லாமல் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    இந்நிைலயில் நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    சிரமம்

    மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் காலையில் பணிக்கு புறப்பட்டு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 4.8 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் பகுதியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே மெயினருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    சாரல் மழை

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற அணைகளில் மழை இல்லை.

    மாறாக மாவட்டம் முழுவதும் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆலங்குளம், கடையம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

    • கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.
    • இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    தென்காசி:

    குற்றாலம் அருவிகளில் ஏற்படும் வெள்ளத்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்க குற்றாலம் மலை ப்பகுதியில் வனமுகாம்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.

    இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அருவிக்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன முகாம்கள் அமைத்து வனத்துறையினரை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

    அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நேரங்களில் வன முகாம்களில் உள்ள வனத்துறையினர் உடனடியாக அருவிப்பகு தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இதன்மூலம் காவல்துறை யினர் துரிதமாக செயல்பட்டு அருவிப்பகுதிகளில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி விபத்துக் கள் நடைபெறாமல் தவிர்க்க லாம்.

    மேலும் அருவிப் பகுதியில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த அபாய சங்கு முறையையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் சாரல் திருவிழாவில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தை களுக்கான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார்.

    மாணவி தீபிகா 2-மும் இடம் விஜயலட்சுமி 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் உஷா, மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சார்ந்த மரியா, துணை முதல்வர் சவுந்தர்ராஜன், மருத்துவர் ராஜேஷ் விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் சுதா விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் ஸ்ரீராம் விரிவுரை யாளர் குழந்தை மருத்துவம் துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை, மருத்துவர் கலா, மருத்துவர் ஹரிஹரன் மற்றும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், யோகா தெரபிஸ்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர்.
    • நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது.

    விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டும் கேக் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

    நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    குற்றாலம் என்ற பெயர் பராந்தகச் சோழன் கல்வெட்டில் இருந்து வருகிறது,இலக்கிய காலத்தில் இருந்து செழுமை மிக்க வரலாற்று தொடர்புடைய ஊர் குற்றாலமாகும் இதனால் இவ்விழாவில் நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

    பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தற்போது வளர வேண்டிய மாவட்டமாகும். இன்னும் அதிகப்படியான துறை அதிகாரிகள் இங்கு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    அதுகுறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி விரைவில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் அனைத்துத்துறை அதிகாரிகளும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இவ்விழாவில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், பிரகாஷ், ரூபி மனோகரன், சிந்தனைச்செல்வன், காந்திராஜன், பழனிநாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ்,செங்கோட்டை நகர்மன்ற தி.மு.க. செயலாளர் ரஹீம், இலஞ்சி முதல் நிலை பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், மேலகரம் முதல் நிலை பேரூராட்சி தலைவர் வேணி,பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வல்லம் தொழிலதிபர் தி.மு.க. பாலகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு வீராணம் சேக் முகமது, பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி, உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் நன்றி கூறினார் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திரைப்பட நடிகர் சூரி, சின்னத்திரை புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட கலை பண்பா–ட்டுத்துறை சார்பில் பொள்ளாச்சி மகேந்திரன் குழு–வினரின் ஜிக்காட்டம் நடைபெற்றது.

    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் அனைத்தும் லேசர் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.

    அதனை தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அருவி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா நடத்தப்படவில்லை.
    • 3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    குற்றாலம் சீசனை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

    பொதிகை திருவிழா

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்காசி தனி மாவட்டமாக உரு வானது. அதன்பிறகு முதல் முறையாக தற்போது சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு சாரல் திருவிழா பொதிகை திருவிழாவாக நடத்தப்படுகிறது. நாளை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு புத்தக திருவிழா 14-ந் தேதி வரை நடக்கிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை மாலை தொடங்கும் விழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பல்வேறு போட்டிகள்

    தொடர்ந்து விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் பல்வேறு போட்டிகள் நடத்தப் படுகிறது. 2-ம் நாளான 6-ந் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.


    3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    9-ந் தேதி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும், 10-ந் தேதி கோலப் போட்டி, யோகா போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    11-ந் தேதி மகளிருக்கான மினி மாரத்தான், மேஜிக் விளக்கு அலங்கார போட்டி நடக்கிறது.

    நிறைவு நாளான 12-ந் தேதி பழைய கார்களின் அணிவகுப்புகளும், கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் தோட்டக்கலை திருவிழாவில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, மண்ணில்லா விவசாய மாதிரி அமைப்பு, செங்குத்து தோட்டம் மாதிரி அமைப்பு, தோட்டக்கலை விளை பொருட்கள் கண்காட்சி, மலர்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    தொடர்ந்து ஜமீன் பங்களா வளாகத்தில் நடைபெறும் உணவு திருவிழாவில் தென்காசி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகிறது.

    ஏற்பாடுகள் தீவிரம்

    நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா முதல் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை சாரல் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு அரங்கு அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டு ள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழாவையொட்டி கலைவாணர் அரங்கு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு பார்வையாளர்கள் அமர் வதற்காக இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.சாரல் விழாவை யொட்டி குற்றாலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.
    • புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    தென்காசி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்தப்படாமல் இருந்துவந்தது.

    8 நாட்கள் சாரல் திருவிழா

    இந்நிலையில் தற்பொழுது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதால் இந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை 8 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இதையொட்டி புத்தகத் திருவிழா குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வைத்து நடத்தப்பட உள்ளது. சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.

    அரங்குகள்

    பல்வேறு அரசுத் துறையின் சார்பில் கலைவாணர் அரங்கத்தின் வெளிப்பகுதியில் அரங்குகள் அமைக்கப்படும். சாரல் திருவிழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், கச்சேரி, ஆணழகன் போட்டி, நாய்கள் கண்காட்சி, பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    மலர் கண்காட்சி

    ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர்க்கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரின் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. சாரல் விழாவுடன் புத்தக கண்காட்சியும் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சின்னத்தை வடிவமைத்து tenkasibookfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.
    • இந்த ஆண்டு சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை போதிய அளவு இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த சாரல் திருவிழா இந்த ஆண்டு அரசு சார்பில் கோலாகலமாக நடத்தப்படும் என பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அருவி களுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    • இந்த ஆண்டு தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் குற்றாலம் சாரல் திருவிழா நடத்துவதற்கு அரசு சார்பில் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • நடத்துவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக அனைத்து குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக குற்றால சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் குற்றாலம் சாரல் திருவிழா நடத்துவதற்கு அரசு சார்பில் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக சாரல் திருவிழா குற்றாலத்தில் நடத்தப்படும் இடமான கலைவாணர் கலையரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அங்குள்ள ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் வேலை பார்க்கப்பட்டு அரங்கம் முழுவதும் வர்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களில் சாரல் திருவிழா நடத்துவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


    • பேரணி சிறுவர் பூங்காவில் தொடங்கி குற்றாலம் மெயின் அருவி , கோவில் வாசல் மற்றும் முக்கய வீதிகள் வழியாக வன அலுவலக முகாமில் நிறைவடைந்தது.
    • வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    உலக பாம்புகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு வனத்துறை தேசிய பசுமை படை, ரோட்டரி கிளப் குற்றாலம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமசுவாமி பிள்ள மேல் நிலைப் பள்ளி விலங்குகள் பாதுகாப்பு அரக்கட்டளை இணைந்து குற்றாலத்தில் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கிரீன் சேம்பியன் முனைவர் விஜயலட்சுமி, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் இலஞ்சி குமரன் வனவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார் . தென்காசி போலீஸ் உதவி சூப்பிரண்டு மணிமாறன் பாம்புகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சிறுவர் பூங்காவில் தொடங்கி குற்றாலம் மெயின் அருவி , கோவில் வாசல் மற்றும் முக்கய வீதிகள் வழியாக வன அலுவலக முகாமில் நிறைவடைந்தது. பாம்புகள் குறித்த விழிப்புணர்வு உரை சேக்உசேன் வழங்கினர். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாரட்டு சான்று வழங்கினார். விழாவில் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், வனகாவலர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் ரோட்டரி சங்க செயலாளர் கணபதி ராமன் நன்றி கூறினார்.

    • குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் அறிவுரைகளின்படி குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய அருவிப்பகுதிகள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் நேற்று முழுவதும் குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையிலும், சுகாதார அலுவலர் ராஜகணபதி முன்னிலையிலும் பொதுசுகாதார நலன்கருதி ஒட்டு மொத்த தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

    மேலும், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து சாலை ஓரப்பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    இதில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் ஆணையின்படி மாற்றுப்பணியில் செய லாற்றிட ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் பரமசிவன், இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, புதூர்(செ) பேரூராட்சி செயல் அலுவலர் குமார்பாண்டியன், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், குற்றாலம் பேரூராட்சி உதவி பொறியாளர் மைதீன், கீழப்பாவூர் இளநிலை பொறியாளர் சவுரிராஜன், ஆய்க்குடி இளநிலை பொறியாளர் கோபி, கீழப்பாவூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குமார், ராயகிரி பேருராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சின்னகுருசாமி, இலஞ்சி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குளத்தூரான், புதூர்(செ) பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சங்கிலிமுத்து மற்றும் குற்றாலம், ஆலங்குளம், கீழப்பாவூர், மேலகரம், இலஞ்சி, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, ஆழ்வார்குறிச்சி, புதூர்(செ), பண்பொழி ஆகிய பேரூராட்சிகளின் மாற்று தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து செயலாற்றினர். இப்பணி தொடர்ந்து இன்று முழுவதும் நடைபெறுகிறது.

    மேலும், பேரருவி பகுதியில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி முள்வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×