search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு அதிரடி நடவடிக்கை
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை படத்தில் காணலாம்.

    குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு அதிரடி நடவடிக்கை

    • குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் அறிவுரைகளின்படி குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய அருவிப்பகுதிகள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் நேற்று முழுவதும் குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையிலும், சுகாதார அலுவலர் ராஜகணபதி முன்னிலையிலும் பொதுசுகாதார நலன்கருதி ஒட்டு மொத்த தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

    மேலும், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து சாலை ஓரப்பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

    குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.8ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    இதில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் ஆணையின்படி மாற்றுப்பணியில் செய லாற்றிட ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் பரமசிவன், இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, புதூர்(செ) பேரூராட்சி செயல் அலுவலர் குமார்பாண்டியன், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், குற்றாலம் பேரூராட்சி உதவி பொறியாளர் மைதீன், கீழப்பாவூர் இளநிலை பொறியாளர் சவுரிராஜன், ஆய்க்குடி இளநிலை பொறியாளர் கோபி, கீழப்பாவூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குமார், ராயகிரி பேருராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சின்னகுருசாமி, இலஞ்சி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் குளத்தூரான், புதூர்(செ) பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சங்கிலிமுத்து மற்றும் குற்றாலம், ஆலங்குளம், கீழப்பாவூர், மேலகரம், இலஞ்சி, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, ஆழ்வார்குறிச்சி, புதூர்(செ), பண்பொழி ஆகிய பேரூராட்சிகளின் மாற்று தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து செயலாற்றினர். இப்பணி தொடர்ந்து இன்று முழுவதும் நடைபெறுகிறது.

    மேலும், பேரருவி பகுதியில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி முள்வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×