என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ள விபத்துக்களை தவிர்க்க வனமுகாம்கள் அமைக்க வேண்டும்- சமூக ஆர்வலர் கோரிக்கை

- கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.
- இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் ஏற்படும் வெள்ளத்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்க குற்றாலம் மலை ப்பகுதியில் வனமுகாம்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அருவிக்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன முகாம்கள் அமைத்து வனத்துறையினரை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நேரங்களில் வன முகாம்களில் உள்ள வனத்துறையினர் உடனடியாக அருவிப்பகு தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம் காவல்துறை யினர் துரிதமாக செயல்பட்டு அருவிப்பகுதிகளில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி விபத்துக் கள் நடைபெறாமல் தவிர்க்க லாம்.
மேலும் அருவிப் பகுதியில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த அபாய சங்கு முறையையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.