search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Charal festival"

    • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட காவடியாட்டம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    டி.வி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, அன்னபாரதி கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட பாடகர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி கலந்துகொண்ட இன்னிசை நிகழ்ச்சியையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    நிறைவு நாள்

    விமர்சையாக நடை பெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலையில் சுற்றுலாத்துறை சார்பில் பழைய கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் மாலையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகளின் மங்கள இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுற்றுலா துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வரவேற்று பேசுகிறார். சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, முதன்மை செயலாளர் சந்திரமோகன் தலைமை ஏற்பு உரையும், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரிசுகள் வழங்கி விழா பேருரையும் ஆற்றுகிறார்.

    சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றுகிறார். மேலும் தென்காசி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகின்றனர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் நன்றி கூறுகிறார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா நடத்தப்படவில்லை.
    • 3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    குற்றாலம் சீசனை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

    பொதிகை திருவிழா

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்காசி தனி மாவட்டமாக உரு வானது. அதன்பிறகு முதல் முறையாக தற்போது சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு சாரல் திருவிழா பொதிகை திருவிழாவாக நடத்தப்படுகிறது. நாளை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழா நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு புத்தக திருவிழா 14-ந் தேதி வரை நடக்கிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நாளை மாலை தொடங்கும் விழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    பல்வேறு போட்டிகள்

    தொடர்ந்து விழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் பல்வேறு போட்டிகள் நடத்தப் படுகிறது. 2-ம் நாளான 6-ந் தேதி கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.


    3-ம் நாளான 7-ந் தேதி பளுதூக்குதல், வலு தூக்குதல், ஆணழகன் போட்டி, யோகா போட்டிகளும், 8-ந் தேதி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், படகு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    9-ந் தேதி மாரத்தான், வில்வித்தை போட்டிகளும், 10-ந் தேதி கோலப் போட்டி, யோகா போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    11-ந் தேதி மகளிருக்கான மினி மாரத்தான், மேஜிக் விளக்கு அலங்கார போட்டி நடக்கிறது.

    நிறைவு நாளான 12-ந் தேதி பழைய கார்களின் அணிவகுப்புகளும், கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் (சனிக்கிழமை)முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் தோட்டக்கலை திருவிழாவில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, மண்ணில்லா விவசாய மாதிரி அமைப்பு, செங்குத்து தோட்டம் மாதிரி அமைப்பு, தோட்டக்கலை விளை பொருட்கள் கண்காட்சி, மலர்களால் உருவாக்கப்பட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    தொடர்ந்து ஜமீன் பங்களா வளாகத்தில் நடைபெறும் உணவு திருவிழாவில் தென்காசி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகிறது.

    ஏற்பாடுகள் தீவிரம்

    நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா முதல் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை சாரல் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு அரங்கு அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டு ள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழாவையொட்டி கலைவாணர் அரங்கு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அங்கு பார்வையாளர்கள் அமர் வதற்காக இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.சாரல் விழாவை யொட்டி குற்றாலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×