search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corruption"

    • மத்திய பிரதேச மாநில வீட்டுவசதித் துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
    • இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு அலுவலர் வீட்டில் 5 முதல் 7 ஆடம்பர கார்கள் உள்பட மொத்தம் இருபது வாகனங்கள், 20 ஆயிரம் சதுர அடி நிலம், விலை உயர்ந்த இரண்டு டசன் கிர் இன மாடுகள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 98 இன்ச் டாப் எண்ட் டிவி மாடல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் சோதனையின் போது கண்டறிந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் வீட்டுவசதித்துறையில் துணை பொறியாளராக பணியாற்றி வருகிறார் 36 வயதான ஹேமா மீனா. பணியில் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

     

    ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஹேமாவின் வீட்டில் நடத்திய திடீர் ஆய்வின் போது, அவரின் வீட்டில் இருந்த கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பொருட்களை கண்டு பிடித்தனர். இவரது வீட்டில் 100 நாய்கள், வீடு முழுக்க வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறை, மொபைல் ஜாமர்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

    ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் முதல் நாளிலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை கண்டறிந்தனர். இது ஹேமா வாங்கும் மாத சம்பளத்தை விட 232 சதவீதம் வரை அதிகம் ஆகும். ஹேமா முதலில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை தனது தந்தை பெயரில் வாங்கி, அதில் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார்.

    ஆடம்பர வீடு மட்டுமின்றி ரைசன் மற்றும் விதிஷா மாவட்டங்களிலும் நிலம் வைத்திருக்கிறார். முதற்கட்ட ஆய்வுகளின் படி இவர் வீட்டுவசதி வாரிய பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட பொருட்களை கொண்டு தனது வீட்டை கட்டியிருக்கிறார் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இத்துடன் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ள தகவல்கள் தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.

    60:40 என்ற மத்திய மாநில அரசுகளின் நிதியில் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டறை நவீன மயமாக்கும் திட்டத்தில் கடந்த அதிமுக அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை கட்டி காக்கும் காவல்துறையை நவீனப்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்திருக்கிறது அதிமுக அரசு.

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை அதிமுக அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது.

    5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.

    தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீடிக்கிறது. தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
    • டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர்களின் ஒரு லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு இது ஒன்றும் புதியதாக சொன்னது இல்லை. எல்லாமே தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

    அவர்கள் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச்க்கு பில் கேட்டு வருகின்றனர். அந்த பில்லை கூட சரியாக காண்பிக்கவில்லை. இந்த டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர். அதில் சீரியல் நம்பர் மாறி உள்ளது.இரண்டு சீரியல் நம்பர் உள்ளது. ஐபிஎஸ்., படித்தவர் யோசனை செய்து செய்வதை சரியாக செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கலாம். வாட்ச் பில்லில் மாட்டிகிட்டாரு. அவர் சொன்னதற்கு நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. ஊழல் என்பது ஒரு சமூக நோய். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. மேலும் இதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.

    மேலும் ஊழல் சமூக நோயாக மாறி இருப்பதால் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையே மாறி உள்ளது. எதிர்காலத்தில் எந்த அளவிற்கு மாறும் என்பதை மன வருத்தத்துடன் எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது. லஞ்ச ஊழலை ஒரு வியாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .அண்ணாமலை சொல்வதில் புதியது ஒன்றுமில்லை அதானி தொடர்பாக கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியதால் மோடியிடம் பதில் இல்லை. வாட்சுக்கும் சரியாக பில் காண்பிக்கவில்லை.

    ஓசியாகத்தான் வாங்கினேன் என தெரிவிக்க வேண்டும். நேர்மை இல்லாத அண்ணாமலையால் அவர் சொல்லக்கூடிய பில்லை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எதிர்கால சமுதாயம் இதுதான் நாடு இதுதான் வழிமுறைகள் என கெட்டுப் போய் விடக்கூடாது. கெட்டுப் போனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து விடும். சமூக சீர்கேடு நடக்கும். அதனால் ஊழல் என்கிற நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    • சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை

    கடலூர்:

    சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பா.ஜ.க கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மீது தி.மு.க. கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை. மிகப்பெரிய பதவியான ஐ.பி.எஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். எந்த கனவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ? அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை. தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது.
    • இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன.

    சிம்லா :

    இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் பணிகளை ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடங்கி உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து இந்த பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக தனது சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் நேற்று உள் விளையாட்டு அரங்கு ஒன்றை திறந்துவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார்.

    தனது உரையில் அவர் கூறியதாவது:-

    இந்தியா கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்தது. இந்த ஒப்பந்தங்களில் பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளன.

    போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் ஊழல் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

    ஆனால் இன்று உலகுக்கு இந்தியா ஆயுதங்களை விற்பனை செய்கிறது. தற்போது ஆயுத விற்பனை 6 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இதன் மூலம் ஆயுத கொள்முதலில் நிகழ்ந்து வந்த ஊழல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்.

    இதைப்போல பிலாஸ்பூர் எய்ம்ஸ் கட்டுமானப்பணி 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கட்டுமானப்பணிகள் நடைபெறாத போதும், ஆஸ்பத்திரி பணிகள் வேகமாக நடந்து முடிந்துள்ளன.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    இதைப்போல மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மாநிலத்தில் ஜெய்ராம் தாக்கூர் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளை பட்டியலிட்ட அவர், இமாசல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா அரசு தொடர வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

    • ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    • தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்தப்படாது.

    மதுரை

    ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது-

    மீனாட்சியம்மன் அருளால் மதுரையில் இன்று பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மதுரை எப்போதுமே புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கோட்டையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது கடந்த தேர்தலில் அதிமுக சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. சாவி கொடுத்தால் பொம்மை சுற்றி வருவது போல முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலையிலிருந்து மாலை வரை சுற்றி வருகிறார் இவரது சுற்றுப்பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன இதனால் என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    திமுகவுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வருத்தப்பட்டு வருகிறார்கள். திமுக ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கிவிட்டனர் மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் அறிவு ஜீவி அவருக்கு தான் அறிவு இருக்கிறது என்று நினைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம் ஆனால் திமுக இதுவரை எந்த திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.

    கருணாநிதிக்கு நூலகமும் நினைவு மண்டபமும் கட்டி வருகிறார்கள் கடலிலும் கருணாநிதியின் பேனா வைப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள் எழுதாத பேனாவுக்கு எதுக்கு 89 கோடியில் திட்டம்.

    கடந்த அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலக தமிழ்ச் சங்கம் ஆம்னி பஸ் நிலையம் பெரிய ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம் புற்றுநோய் சிகிச்சை மையம் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் தடுப்பணைகள் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம் ஆனால் திமுக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே தொடங்கி வைத்து வருகிறது யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல உள்ளது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண உதவித்தொகை உயர்த்துவோம் என்று கூறினார்கள் ஆனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் அதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிப்போம் என்று சொல்லி தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைத்து விட்டார்கள் இதுபோல மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் ரத்துசெய்து கொண்டிரு க்கிறார்கள்.

    தி.மு.க.வின் இந்த செயல்பாடுகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும் தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று திமுக சொல்லியிருந்தது ஆனால் இப்போது 100 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது மின் கட்டணத்தையும் அதிகரித்து விட்டார்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை திமுக அமைச்சர் இழிவாக பேசுகிறார். இதுதான் திராவிட மாடலா? தேர்தலில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக மறந்து விட்டது.

    இது எல்லாமே நடிப்பு என மக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள் மதுரையில் ஒரு அமைச்சர் தனது மகன் திருமணத்தை ரூ. 30 கோடியில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார்.

    கோவையில் அவருக்கு எங்கிருந்து இந்த பணம் வந்தது எல்லாம் கமிஷன் கலெக்சன் கரப்ஷன் தான் அரசு பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் கரூரில் போடாத சாலைக்கு நிதி எடுக்கிறார்கள் இதுதான் திராவிட மாடலா? எனவே அதிமுகவை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக அரசு வேட்டுவந்துவிட்டது ஏழை எளியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது இதன் மூலம் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றிய ஒரே அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா ஆகியோர் வழங்கினர் .

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, மதுரை நகர நிர்வாகிகள் வில்லாபுரம்ராஜா, திரவியம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், மாவட்ட துணை செயலாளர் கணேஷ் பிரபு, பரவை ராஜா, வில்லாபுரம் ரமேஷ், பி.ஆர்.சி.மகாலிங்கம் பைகாரா கருப்புசாமி, முத்துவேல், பாசறை ஜெயரீகன், முன்னாள் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது :- இந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆனால்தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள். இலங்கை அதிபரான ராஜபட்சே இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என ஓடினார். அதே நிலைமை தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியின் போது குப்பை வரி உயர்த்துவதாக சொன்னதற்கே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இரண்டு அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் இன்று குப்பைக்கு வரி விதித்து இருக்கிறார். தி.மு.க.வுக்கு திருப்பூருக்கும் எப்போதும் ஒத்து வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் திருப்பூர் நாசமாக போகிறது. 2010 ல் தொழில் எல்லாம் மூடிப்போய் மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டு மக்கள் சென்றார்கள். இன்றைக்கு அதே போல ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வால் திருப்பூர் தொழில் நிலை முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாய ஆலை பிரச்சினை ஏற்பட்டு திருப்பூர் தொழில் முடங்கிய போது ஜெயலலிதா வட்டியில்லா கடனாக 213 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றினார்கள். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    திருப்பூருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்து இருக்கிறது. 1300 கோடி செலவில் நான்காவது குடிநீர் திட்டத்தினை கொண்டு வந்து இருக்கிறோம். ஏற்கனவே நிறைவேறி இருக்க வேண்டிய இந்த திட்டத்தினை மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒரு நன்மையும் மக்களுக்கு செய்யாத தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உடனடியாக நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை முடித்து திருப்பூர் மக்களுக்கு திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

    தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்து விட்டது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

    • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை கெஜ்ரிவால் நம்பமாட்டார்.
    • நேரடி பணம் வசூல் மட்டுமே கெஜ்ரிவாலின் ஒரே நோக்கம்.

    புதுடெல்லி :

    டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு 1,000 தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைப்போல பஸ்கள் வாங்கவும், பராமரிக்கவும் கடந்த 2020-ம் ஆண்டு போடப்பட்ட டெண்டரிலும் முறைகேடு புகார் கிளம்பி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்ட பரிந்துரைகளுக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இது டெல்லி அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மேற்படி முறைகேடுகள் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி அரசையும், முதல்-மந்திரி கெஜ்ரிவாலையும் பா.ஜனதா கடுமையாக சாடியுள்ளது.

    கெஜ்ரிவாலின் நண்பர்கள் பயனடைவதற்காக ஒப்பந்தங்களும், டெண்டர்களும் போடப்படுவதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'முதலில் கலால் கொள்கை, தற்போது பஸ்கள் வாங்கியதில் முறைகேடு. கெஜ்ரிவால் என்றால் ஊழல் என மாறிவிட்டது' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'உங்களை 'தீவிர நேர்மையாளர்' என்று நீங்கள் எப்படி கூறலாம்? நீங்கள் 'தீவிர ஊழல்வாதி' என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். முதல்வர் பதவியில் நீடிக்க உங்களுக்கு உரிமை இல்லை' என்றும் சாடினார்.

    முறைகேடு புகார்களுக்கு ஆம் ஆத்மி பதில் அளிக்காமல், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறைகூறினார்.

    இதைப்போல டெல்லி பா.ஜனதா தலைவர் அதேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, 'சில நிறுவனங்களின் ஆதாயத்துக்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன' என குற்றம் சாட்டினார்.

    மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை கெஜ்ரிவால் நம்பமாட்டார் எனவும், நேரடி பணம் வசூல் மட்டுமே அவரது ஒரே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகளை பெருமளவில் திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.
    • 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் சிபிசிஎல் கையகப்படுத்தும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    முட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாநில தலைவர் ஆனந்தகுமார், போராட்டக் குழு தலைவர் விஜயராஜ் ஆகியோர் பேசினார்.

    கூட்டத்தில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்தும் 610 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பிற்குரிய தொகையை வழங்க வேண்டும், சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகளை பெருமளவில் திரட்டி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இயற்கை வேளாண் விவசாயி பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பாளர் பார்த்தசாரதி மற்றும் சங்க நிர்வாகிகள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    • வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.
    • பி.ஏ.பி.யில் திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை.

    உடுமலை:

    உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார்.ஆர்டிஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன்,உடுமலை தாசில்தார் கண்ணாமணி,மடத்துக்குளம் தாசில்தார் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

    பாலதண்டபாணி:கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சுண்டக்காம்பாளையம் விவசாயிகளின் வழித்தட பிரச்சினையை தீர்த்து வைத்ததற்கு நன்றி.பிஏபி வாய்க்காலில் அரசு கலைக்கல்லூரி முதல் சுந்தர் நகர் வரை குப்பைகள் கொட்டப்படுகிறது.அதனை பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    ஆர்டிஓ:குப்பை கொட்டுபவர்களை படம் எடுத்துக் கொடுங்கள்.வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.

    மதுசூதனன்:பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து தேங்காய் விலையை குறைத்து வருகின்றனர்.அவர்களுக்கு விலை நிலவரம் வெளியிடும் நிறுவனங்களும் உடந்தையாக செயல்பட்டு குறைந்த விலையை பதிவிடுகின்றனர்.தேங்காய் விலை பாதிக்கும் குறைந்ததால் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.தென்னை நார் மற்றும் மஞ்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் மட்டை மில்கள் திணறி வருகின்றன.திருமூர்த்திநகரிலுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் தமிழை சேர்க்க வேண்டும்.

    வாளவாடி வரதராஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலம் பயன்பாடில்லாமல் கிடப்பதால் புதர் மண்டி விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.அதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடை பணியாளர்கள் நியமனம் செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது.அப்போதைய கால்நடைத்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் என்பதற்காக உடுமலை தாலுகாவில் பல தகுதியற்ற நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.ஜம்புக்கல் கரடு மலை அழிப்புக்கு முடிவு காண வேண்டும்.

    ஸ்ரீதர்: குடிமங்கலம் ஒன்றியத்தில் கடந்த 2019 ல் 500 மூட்டை அரசு சிமெண்ட் பெறுவதற்காக பணம் செலுத்திய ஏழை விவசாயிகளுக்கு இதுவரை சிமெண்ட் கிடைக்கவில்லை.இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சௌந்திரராஜன்:தற்போது பி.ஏ.பி.யில் திறக்கப்படும் தண்ணீரால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை.மடைக்கு 20 நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படவுள்ளது.20 நாளில் எந்த பயிரும் சாகுபடி செய்ய முடியாது.சின்ன வெங்காயம்,தக்காளி போன்ற விளை பொருட்கள் விலை சரிவால் கடனாளியாகியுள்ள விவசாயிகள் மேலும் கடன் வாங்கி நஷ்டமடையும் நிலையே ஏற்படும்.

    ராமலிங்கம்:தற்போது திறக்கப்படும் தண்ணீர் முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படும்.ஏற்கனவே 2578 முறைகேடுகள் உள்ளதாக தலைமைப்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.7 நாள் திறப்பு 7 நாள் நிறுத்தம் என்ற வகையிலேயே தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

    நீரா பெரியசாமி:நீரா பானத்தை விவசாயிகள் கூட்டாக சேர்ந்து இறக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.தனிப்பட்ட விவசாயி இறக்கி விற்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.வடுகபாளையம் அருகில் தனியார் நிறுவனத்தினரின் பணிகளின் போது உடைக்கப்பட்ட குடிநீர்க்குழாயிலிருந்து 5 நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது.இதனால் 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடிமங்கலம் குளத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அருகிலுள்ள கிணற்று நீர் துர்நாற்றமடிக்கும் நிலை உள்ளது.குடிமங்கலம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.அவை ஆடு மாடுகளைக் கடித்த நிலை மாறி தற்போது மனிதர்களையும் கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பரமசிவம்:வாளவாடி பெரிய குட்டை,நடுக்குட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.கடந்த காலங்களில் விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு ஒருசில நாட்கள் கடந்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.தற்போது கூட்டம் முடிந்ததும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்களை ஆர்டிஓ. நேரடியாக வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்த செயல் விவசாயிகளைக் கவர்ந்தது.

    துப்பாக்கிச்சூடு தாக்குதலில் முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.
    உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

    இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது.  இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.

    இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.

    இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரன்கூ 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ரின்கூ சிங் ரஹீ கூறியதாவது:-

    எனது மாணவர்கள் தன்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன்.

    இதற்கு முன் 2004ம் ஆண்டில் நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

    என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது
    பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
    பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சரான விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இந்நிலையில், பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    பகவந்த் மான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று முழு தேசமும் ஆம் ஆத்மியை நினைத்து பெருமை கொள்கிறது.

    மக்கள் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் குழப்படைந்தனர். ஊழல் இல்லாமல் ஒரு கட்சி எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எதிர்க்கட்சிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் நம்மை தியாகம் செய்யலாம். ஆனால் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஊழல் குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சர் கைது- பதவி நீக்கம் செய்து பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை
    ×