search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting"

    • வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது என மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தீர்மானத்தில் கூறியுள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கி னார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன் னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையாசுழியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.என்.நாக ராஜன், தென்மண்டல தலைவர் குஷின் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையா புரி, சோழவந்தான் நகர துணைச் செயலாளர் சாமி நாதன், அலங்கை ஒன்றிய துணை செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், தொழி லாளர் அணி நகர செயலா ளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, 28-ந்தேதி கும்பகோ ணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்புவிழா, 29-ந்தேதி மாரியப்ப வாண் டையார் நூற்றாண்டு விழா, 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்க ளுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயி களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

    சாத்தை யாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை தொடங்குவதை யொட்டி மழைநீரை சேக ரிக்க ஏரி, கண்மாய், குளங்க ளில் சீமைக்கருவேல முட் களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பு மணிவண்ணன் நன்றி கூறி னார்.

    • கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர்.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிர த்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    தசரா குழுவினர் திருவிழாவின் போது நடந்துகொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., வாமணன் தலைமை தாங்கினார்.

    திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், போக்கு வரத்து துறையை சேர்ந்த மயிலேறும் பெருமாள், குலசேகரன் பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் ராமசுப்பி ரமணியன் வரவேற்றார்.

    தொடர்ந்து பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டு கோள் வைத்து பேசினார்.

    4 மாவட்டங்களுக்கு விடுமுறை

    கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர். பெரும்பா லானவர்கள் 9, 10, 11-ம் திருவிழா நாட்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் திருவிழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படும்.

    எனவே நான்கு மாவட்டங்களில் மட்டும் 25-ந்தேதி விடுமுறை விட வேண்டும் என தெரிவித்தனர்.

    ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. வாமணன் கூறுகையில்,

    தசரா குழுக்களின் ஆலோ சனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் விரிவாக செய்யப்படும் என தெரிவித்தார். முடிவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் குலசேகரன் பட்டினம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கணேசன், நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகன்சுந்தரம், தாண்ட வன்காடு கார்த்தி கேயன், பிச்சிவிளை சுதாகர், ஒடக்கரை சுகு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்ட ஜெய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சின்னமனூர் ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நிறுவனதலைவர் ரவி தலைமை தாங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வார்டு உறுப்பினர்கள் குறைகளை தெரிவித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில், துணைத் தலைவர் குல்சர் அகமது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)சந்தானம், பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொது இடங்க ளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து உருவாகும் குப்பைகளை கொட்டுதல், சாலை யோ ரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துதல், நகராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் விற்ப னை மற்றும் பயன்படுத்து தல் போன்றவை குறித்து ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி டி.எஸ்.பி., பார்த்தீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தேனி தாசில்தார் சர வணபாபு, நெடுஞ்சாலை த்துறை தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, நகராட்சி சுகாதார அலு வலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் உள்பட வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    • களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து நெல்லை வந்தார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்து வரும் உள்ளாட்சித்துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அமைச்சர் கே.என்.நேரு

    கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகி யோர் தலைமை தாங்கி பேசினர்.

    கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண், தனுஷ் குமார் எம்.பி., கலெக்டர்கள் கார்த்திகேயன், செந்தில்ராஜ், துரை ரவிச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலை குமார்,

    மேயர்கள் சரவணன், ஜெகன் பெரியசாமி, மகேஷ், மாநகராட்சி கமிஷனர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் குமார், ஆனந்த் மோகன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வளர்ச்சி திட்டப்பணிகள்

    இதில் நெல்லை, தூத்துக் குடி மாநகராட்சிகள், 3 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு, அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர், மாநகராட்சிகளின் மண்டல சேர்மன்கள், கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பேரூ ராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து காரில் இன்று அதிகாலை புறப்பட்டு நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விவசாய தொழி லாளர் அணி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதியில் நடந்த வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    • பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ராமநாத புரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பருவ மழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வட்டாட்சியர் சேது ராமன் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் பருவ மழை காலத்தில் மழைநீர் ஊருக்குள் புகுவதை தடுக்க தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார்படுத்த வேண்டும். ரேசன் கடைக ளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட் களை இருப்பு வைக்க வேண்டும்.

    மழை தொடங்கும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்தும், சேதமடைந்த மின் கம்பங் களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்வயர்கள் அறுந்து விழுந்தால் உடனடி யாக மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணி களை மேற்கொள்ள வேண்டும்.

    மழை கால நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பேரிடர் மேலாண்மை சார்பில் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர், வாகனங்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    பாக்குவெட்டி, மண்டல மாணிக்கம், பேரையூர், செய்யமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப் பாலங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் போலீ சார், ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள், சுகா தாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
    • பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    நெல்லை:

    திருக்குறுங்குடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் திருக்குறுங்குடியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பயணிகள் நிழற்குடை

    சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஏற்கனவே திருக்குறுங்குடி கைகாட்டி சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை அருகிலும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

    மேலும் திருக்குறுங்குடி பெரிய குளத்தில் மராமத்து பணிகளை மேற்கொண்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் விரைந்து மராமத்து பணி, சாலைத்தெரு பழைய அன்னதான சத்திரத்தில் திருமண மண்டபம், திருப்பாற்கடல் நம்பிகோவில் எதிர்புறம் அரசு ஆற்று புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை மற்றும் திருமேலசாலைத்தெரு கைகாட்டி முன்னாள் பயணியர் விடுதி அருகே மின்வாரிய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவமனை அமைத்தல் போன்ற பணிகளை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் செயல் அலுவலர் உமா, இளநிலை பொறியாளர் பரமசிவன், பண்டக சாலை தலைவர் கணேசன், திருக்குறுங்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் இசக்கியம்மாள், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, திருக்குறுங்குடி நகர செயலாளர் கசமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சாமிநாதன், தி.மு.க. நிர்வாகி மாடசாமி, சமூக ஆர்வலர் ராமசுப்பிரமணியம், வார்டு கவுன்சிலர்கள் உள்பட காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனைதொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்குள்ள தலைமை மருத்துவரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அப்போது எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    • ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    கடலூர்:

    வடலூரில் நெய்வேலி உட்கோட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் நெய்வேலி டவுன்ஷிப் சாகுல்ஹமீத், தெர்மல் லதா, மந்தாரக்குப்பம் மலர்விழி, ஊமங்கலம் பிருந்தா, குறிஞ்சிப்பாடி வீரசேகரன், வடலூர் ராஜா, குள்ளஞ்சாவடி பாண்டிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் அனுமதி பெற வேண்டும்.ஒலி பெருக்கி பயன்படுத்தினால் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒலிபெருக்கி டெசிபல் அளவினை குறைத்து பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விழாவின் போது பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர் மற்றும் இந்து முன்னணியினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

    • கல் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார்.மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட் கிழமை) கொண்டாடப்படு கிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    இந்த ஆண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலை களை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதி களில் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைப்ப தற்காக பாளையை அடுத்த கிருபா நகர் பகுதியில் உள்ள கூடத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப் பட்டு வரும் நிலையில் அந்த சிலைகள் அரசின் உத்தரவை மீறி இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மூலப்பொருட்களை கொண்டு தயார் செய்யப் படுவதாக தகவல்கள் பரவியது.

    பூட்டியதால் பரபரப்பு

    இதையடுத்து அங்கு வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று சோதனை செய்தனர். தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் அங்கு திரண்டு ஆர்டர் கொடுத்த சிலைகளை அவசர கதியில் எடுத்துச் சென்றனர். இதனால் மேற்கொண்டு சிலைகள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து பூட்டினர்.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது. சிலைகளையும் எடுத்துச் சென்றவர்களிட மிருந்து பறிமுதல் செய்து அந்த கூடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இதற்கு இந்த அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே சிலைகள் தயாரிக்கும் சிற்பக்கூடம் முன்பு 3-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாளை தாசில்தார் சரவணன் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சிலைகள் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார்

    மங்கலம் : 

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் "உள்ளூரில் கல்குவாரி வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்"என கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி இயங்க வேண்டும்" என்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்கள் "கல்குவாரி வருவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது" என கருத்து தெரிவித்தனர்.

    ×