சின்னமனூரில் மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்ட ஜெய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சின்னமனூர் ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நிறுவனதலைவர் ரவி தலைமை தாங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com