search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா- பாளை தாசில்தார் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம்
    X

    பாளை கிருபா நகரில் விநாயகர் சிலைகள் செய்யும் சிற்பக்கூடத்தில் 3-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதையும், அங்கு சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் பரிதவிப்புடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.

    விநாயகர் சதுர்த்தி விழா- பாளை தாசில்தார் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம்

    • விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட் கிழமை) கொண்டாடப்படு கிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    இந்த ஆண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலை களை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதி களில் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைப்ப தற்காக பாளையை அடுத்த கிருபா நகர் பகுதியில் உள்ள கூடத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப் பட்டு வரும் நிலையில் அந்த சிலைகள் அரசின் உத்தரவை மீறி இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மூலப்பொருட்களை கொண்டு தயார் செய்யப் படுவதாக தகவல்கள் பரவியது.

    பூட்டியதால் பரபரப்பு

    இதையடுத்து அங்கு வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று சோதனை செய்தனர். தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் அங்கு திரண்டு ஆர்டர் கொடுத்த சிலைகளை அவசர கதியில் எடுத்துச் சென்றனர். இதனால் மேற்கொண்டு சிலைகள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து பூட்டினர்.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது. சிலைகளையும் எடுத்துச் சென்றவர்களிட மிருந்து பறிமுதல் செய்து அந்த கூடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இதற்கு இந்த அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே சிலைகள் தயாரிக்கும் சிற்பக்கூடம் முன்பு 3-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாளை தாசில்தார் சரவணன் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சிலைகள் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×