என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
சுக்கம்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்
- பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார்
மங்கலம் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் "உள்ளூரில் கல்குவாரி வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்"என கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி இயங்க வேண்டும்" என்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்கள் "கல்குவாரி வருவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது" என கருத்து தெரிவித்தனர்.






