search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conflict"

    • ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42) விவசாயி, இவரது மகன் செல்வம் (15) மாற்றுத்திறனாளி, இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது வழியில் மாடு கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் (43) என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஏழுமலை, அவரது தம்பி சரவணன், மற்றும் சரவணன் மனைவி சுகந்தி ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஏழுமலை தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன், மணிரத்தினம், கண்ணன், மணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணிரத்தினம் மற்றும் பத்ரி நாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    இதே போல் பத்ரி நாராயணன் தனது வீட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மனைவி ரேவதி, உறவினர்கள் சரவணன், சுகந்தி, கலைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அம்சா, சடையன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தன், சுமதி, வீரமங்கலத்தைச் சேர்ந்த வீரப்பன், தியாகதுருகத்தைச் சேர்ந்த பவுனாம்பாள், பாரதி, மணிவேல், சாந்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    • மணல் கடத்தல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது
    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு, 8 பேர் கைது

    மண்ணச்சல்லூர்,

    திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடியைச் சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டி கேட்டனர். இதில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கும், ஊர்காரர்களுக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.இரு தினங்களுக்கு முன்பு தாளக்குடி பஜனை மடத்தெருவை சேர்ந்த கு பழனி (வயது 29), கீரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (28), பரந்தாமன் (22) ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சமயபுரம் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெரு வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.இதையடுத்து பரந்தாமன், குமார், ராஜா உள்ளிட்ட சிலர் கையில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவுக்குள் நுழைந்தனர்.இதனை கண்ட எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், மித்ரன் உள்ளிட்ட சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் தொடுத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பரந்தாமன் தரப்பினர் சுரேஷ் மற்றும் மித்ரனை அரிவாளால் வெட்டி அவர்களது வீட்டையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் தனியார் பள்ளி பஸ் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சுரேஷ், மித்ரன், புறாமணி ஆகியோரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.இது தொடர்பாக சமயபுரம் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து பரந்தாமன் (26), தாளக்குடி பஜனை மடத் தெரு புறாமணிக்கண்டன் (31), லால்குடி தாளக்குடி முத்தமிழ்நகர் அப்பாஸ்(25), தாளக்குடி நெப்போலியன் (27), கீரமங்கலம் மாரியம்மன் ே காவில் தெரு ராஜதுரை ஆகிய 5 பேரையும், சுரேஷ் தரப்பில் தாளக்குடி வலக்கோட்டை வேல்முருகன்(27), பிச்சாண்டார் கோவில் மணிகண்டன் (27), தாளக்குடி வடக்கு தெரு மோகன் குமார் (25) ஆகிய 8 பேரை கைது செய்துள்ளனர்.நாட்டு வெடிகுண்டு வீசி இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர்.
    • எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே காந்தளவாடி கிராமம் உள்ளது. இங்கு கோவிந்தராஜ் (வயது 37) வசித்து வருகிறார். அதே ஊரில் வசிப்பவர்கள் தேவநாதன் (35), ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஹாரன் அடித்தபடி, மோட்டார் சைக்கிளின் ஆக்சிலேட்டரை திருகி பலத்த சத்தத்தை எழுப்பினர். மேலும், இதனை அடிக்கடி செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார். இது அரசாங்கத்தால் போடப்பட்ட சாலை, இங்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். இதற்கு தான் நாங்கள் சாலை வரி கட்டுகிறோம் என்று தேவநாதன் மற்றும் 3 பேரும் கூறினார்கள். தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் தகராறாக மாறியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அவரது குடும்பத்தார் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர். ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்படும் மருதபாண்டியனின் மனைவி சிந்துஜா அளித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ், கோத ண்டபாணி, ராமானுஜம், ஜோதி ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டையில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
    • அரிவாள், இரும்பு கம்பியுடன் மோதிக்கொண்டனர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உடையாளிப்பட்டி அருகே நெய்வேலி முனியன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த முனியய்யா (வயது 30), முத்தையா (62) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, இருதரப்பை சேர்ந்தவர்களும் அரிவாள், இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் முனியய்யா, முத்தையா, பேபி (58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட நெய்வேலி பகுதியை சேர்ந்த சரவணன் (40), கோவிந்தராசு (34), விஜயகுமார் (60), மதியழகன் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வசந்தகுமார் என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார்.
    • அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் வினோத் (வயது43). இவரிடம், மேலகாசாகு டியைச்சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் சிலிண்டர் போடும் வேலை செய்துவந்தார். வசந்தகுமார், காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரி கேண்டீனுக்கு சிலிண்டர் போடுவதில், ரூ.2 லட்சம் வினோத்துக்கு கொடுக்க வேண்டியு ள்ளதாக கூறப்படு கிறது. பலமுறை கேட்டும் வசந்த குமார் பணம் தராததால், தனது கம்பெனியில் வேலை செய்யும் ராஜசேகர் என்பவர் மூலம், வசந்தகுமாரின் மோட்டர் சைக்கிளை வினோத் எடுத்து சென்றார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த வசந்தகுமார், அவரது அண்ணன் வசந்தராஜா (38), அண்ணி இலக்கியா (30) ஆகிய 3 பேரும், வினோத் வீட்டுக்கு சென்று, வினோத்தை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த வினோத்தை தாக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளுடன் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த வினோத், நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு ஆஸ்பத்திரியில் வினோத் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல், இலக்கியா என்பவர் நெடுங்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை, வினோத் என்பவர் எங்களை கேட்காமல் எடுத்து சென்றதால், நான், எனது கணவர் வசந்தராஜா, அவரது தம்பி வசந்தகுமார் ஆகியோர் வினோத் வீட்டுக்கு சென்று கேட்ட போது, வினோத் வசந்த ராஜாவை தாக்கினார். தடுக்கசென்ற வசந்தகுமாரையும் தாக்கினார். என்னை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துவிட்டார். மேலும், கொலைமிரட்டலும் விடுத்துள்ளதால், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் இலக்கிய புகார்மீது வழக்கு பதிவு செய்து வினோத்தை விசாரித்து வருகின்றனர்.

    • 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45).

    இவர் நேற்று இரவு தனது மினிலாரியில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுடன் (50) தஞ்சாவூருக்கு வந்தார்.

    பின்னர் தஞ்சாவூர் மார்க்கெட்டில் காய்கறி லோடை ஏற்றி கொண்டு மீண்டும் அதே மினிலாரியில் திருவையாறு நோக்கி புறப்பட்டார்.

    அந்த மினி லாரி திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மற்றொரு லாரி வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

    இந்த கோர விபத்தில் மினி லாரியில் இருந்த ஆறுமுகம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
    • மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருள் (வயது27) இவருடைய மனைவி அமுல் (23) . இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று மதியம் அருள்வேலைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் குடிபோதையில் இருந்த அருள் அவரது மனைவி அமலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அமுல் தனது சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் அருள் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமுலின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
    • பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
    • பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,

    அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார்.
    • திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருவந்திபுரம் கே.என். பேட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி ஜோதிக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×