திருநாவலூர் அருகே இடப்பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல்2 பேர் படுகாயம்

இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.
திருநாவலூர் அருகே இடப்பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல்2 பேர் படுகாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com