லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி

2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45).

இவர் நேற்று இரவு தனது மினிலாரியில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுடன் (50) தஞ்சாவூருக்கு வந்தார்.

பின்னர் தஞ்சாவூர் மார்க்கெட்டில் காய்கறி லோடை ஏற்றி கொண்டு மீண்டும் அதே மினிலாரியில் திருவையாறு நோக்கி புறப்பட்டார்.

அந்த மினி லாரி திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே மற்றொரு லாரி வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்தில் மினி லாரியில் இருந்த ஆறுமுகம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com