search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடப்பிரச்சினை"

    • வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.
    • உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார்.

    தாம்பரம்:

    பல்லாவரம், குளத்துமாநகர், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எசேக்கியேல். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக வழிப்பாதை தொடர்பாக பிரச்சினை உள்ளது.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுக்கு முன்பு எசேக்கியேல் வீட்டுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்து செல்லும் வகையில் 1½ அடி அகலத்தில் மட்டும் சென்று வர வழி ஒதுக்கப்பட்டது. இந்த பாதை வழியாக எசேக்கியேல் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் எசேக்கியேலின் தந்தை கிறிஸ்துதாஸ் (73) என்பவர் உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்து போனார். அவரது உடலை புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் வழிப்பாதை அடைக்கப்பட்டதால் கிறிஸ்துதாசின் உடலை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி எசேக்கியேல் மற்றும் அவரது உறவினர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடலை எடுத்து செல்லும் வகையில் ஒரு நாள் மட்டும் போதிய அளவில் வழிவிடுமாறு எதிர்தரப்பினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    அப்போது உடலை எடுத்து செல்ல வழி ஏற்படுத்தவில்லை எனில் தந்தையின் உடலை வீட்டிற்குள் புதைக்கப்போவதாக எசேக்கியேல் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இதைத்தொடர்ந்து போதிய வழி ஏற்படுத்தப்பட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடிக்கடி 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • ராஜேந்திரன் ஆத்திரம் அடைந்து அரிவாளால் திருஞானசம்பந்தத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 41).

    இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    அடிக்கடி 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று மண்ணியாறு கரையில் திருஞானசம்பந்தம் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ராஜேந்திரன் ஆத்திரம் அடைந்து அரிவாளால் திருஞானசம்பந்தத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

    இந்த தாக்குதலில் திருஞானசம்பந்தம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருஞானசம்பந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சோழபுரம் போலீசாரின் அலட்சியத்தால் தான் கொலை நடந்ததாக கூறி திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இடபிரச்சினையில் தகராறு செய்த 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமயத்துரை மற்றும் பிச்சைமுத்து. இருவரும் உறவினர்கள். அதே ஊரைச் சேர்ந்த ராமு வீடு கட்டுவதற்காக சமயத்துரையின் வீட்டின் பின்புறம் பில்லர் போடுவதற்காக குழி தோண்டினர்.

    அப்போது சமயத்துரைக்கும் ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமு மற்றும் உறவினர்கள் பிச்சைமுத்து, துரைப்பாண்டி, குமார், இளையராஜா, கிருஷ்ணன் ஆகிய 6 பேர் சேர்ந்து சமயத்துரையை கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாசேத்தி போலீசார் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×