என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடபிரச்சினையில் தகராறு; 6 பேர் மீது வழக்கு
- இடபிரச்சினையில் தகராறு செய்த 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமயத்துரை மற்றும் பிச்சைமுத்து. இருவரும் உறவினர்கள். அதே ஊரைச் சேர்ந்த ராமு வீடு கட்டுவதற்காக சமயத்துரையின் வீட்டின் பின்புறம் பில்லர் போடுவதற்காக குழி தோண்டினர்.
அப்போது சமயத்துரைக்கும் ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமு மற்றும் உறவினர்கள் பிச்சைமுத்து, துரைப்பாண்டி, குமார், இளையராஜா, கிருஷ்ணன் ஆகிய 6 பேர் சேர்ந்து சமயத்துரையை கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாசேத்தி போலீசார் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






