search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருதரப்பினர் மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
    X

    இருதரப்பினர் மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

    • மணல் கடத்தல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது
    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு, 8 பேர் கைது

    மண்ணச்சல்லூர்,

    திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடியைச் சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டி கேட்டனர். இதில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கும், ஊர்காரர்களுக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.இரு தினங்களுக்கு முன்பு தாளக்குடி பஜனை மடத்தெருவை சேர்ந்த கு பழனி (வயது 29), கீரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை (28), பரந்தாமன் (22) ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சமயபுரம் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெரு வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.இதையடுத்து பரந்தாமன், குமார், ராஜா உள்ளிட்ட சிலர் கையில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவுக்குள் நுழைந்தனர்.இதனை கண்ட எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், மித்ரன் உள்ளிட்ட சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் தொடுத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பரந்தாமன் தரப்பினர் சுரேஷ் மற்றும் மித்ரனை அரிவாளால் வெட்டி அவர்களது வீட்டையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் தனியார் பள்ளி பஸ் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சுரேஷ், மித்ரன், புறாமணி ஆகியோரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.இது தொடர்பாக சமயபுரம் போலீசார் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து பரந்தாமன் (26), தாளக்குடி பஜனை மடத் தெரு புறாமணிக்கண்டன் (31), லால்குடி தாளக்குடி முத்தமிழ்நகர் அப்பாஸ்(25), தாளக்குடி நெப்போலியன் (27), கீரமங்கலம் மாரியம்மன் ே காவில் தெரு ராஜதுரை ஆகிய 5 பேரையும், சுரேஷ் தரப்பில் தாளக்குடி வலக்கோட்டை வேல்முருகன்(27), பிச்சாண்டார் கோவில் மணிகண்டன் (27), தாளக்குடி வடக்கு தெரு மோகன் குமார் (25) ஆகிய 8 பேரை கைது செய்துள்ளனர்.நாட்டு வெடிகுண்டு வீசி இருதரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×