search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
    • திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதன் அடிப்படையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமையில், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் அலுவலர் ஜோதி, கொள்ளிடம் போலீஸார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா (வயது 26) பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கொள்ளிடம் காவல்நி லையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர்.

    விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த 4 கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்ழுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி அருகே மேட்டமலை வாடியூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடை ஒன்றின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி வி.கே.எஸ்.தெருவை சேர்ந்த விஜயன் (38), ஜெனார்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதியில் வங்கி அருகே தகர செட்டு ஒன்றில் 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.

    இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.

    மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கெடிலம் ஆற்றுப்பகுதி சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகே போலீசார் சென்றனர்.

    போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். இருந்தபோதும் அவர்கள் தப்பிவிட்டனர். இதை யடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றில் இருந்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
    • ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

    புதுச்சேரி:

    காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.

    • அந்த பஸ் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
    • விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நாகை புறவழிச்சாலை செல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் அந்த பஸ் நிற்காமல் அதி வேகமாக சென்றது.

    இதில் சந்தேகம் அடைந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 2 கிலோ மீட்டர் விரட்டி சென்று வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே பஸ்சை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் ஆவணங்களை சோதனை செய்த போது, வரி கட்டாமல் பஸ்சை இயங்கியதும், பல்வேறு ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

    இதையடுத்து விதிமீறல்கள் தொடர்பாக ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆம்னி பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர்.

    சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.

    • கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாட்டு வண்டிகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,பிரசன்னாமற்றும்போலீசார்வேல்முருகன்,உதயகுமார் ஆகியோர்இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றுப்பகுதியில் 2மாட்டுவண்டியில்அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவதிகை குட்ட தெரு கணபதி(64),பண்ருட்டி ெரயில்வே காலனிமகாலிங்கம்(55) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    அரியலூரில் சிறுவர், சிறுமியர் ஓட்டி வந்த 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

    அரியலூர்,  

    அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார், தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்களை போலீசார், பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள், காவல் நிலையத்துக்குச் எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு சிறுவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார், இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடக் காரணமாக இருக்க மாட்டோம் என உறுதிமொழி எழுதி வாங்கிக்கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைத்தனர்.

    • இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.
    • கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகேயுள்ள மாதம்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன்பாக பித்தளையால் செய்யப்பட்ட சூலாயுதம் நடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் சூலாயுதத்தை வணங்கிவிட்டு பின்னர் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பர். இந்நிலையில் முத்துலிங்கமடம் கிராமத்தின் இருளர் குடியிருப்பில் வசிக்கும் குமரேசன் (வயது 38) என்பவர் இன்று விடியற்காலையில் சூலாயுதத்தை திருடினார். இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் குமரேசனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சூலாயுதத்தை பறிமுதல் செய்து, ஊர் பிரமுகர்களிடம் வழங்கி, கோவிலுக்குள் பாதுகாப்பான இடத்தில் நடும்படி திருவெண்ணைநல்லூர் போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் மாதம்பட்டு கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பழனி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
    • ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடலூர் -நெய்வேலி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பழனி (வயது 40), அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆர்.சி. தெற்கு தெருவில் கடை வைத்திருந்த ஆலிஸ்மேரி (41) என்பவரும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் துரைராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.

    • கோவில் நகை- உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோவில்களில் உண்டியல் உடைத்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், டி.எஸ்.பி.ரூபன்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் வட்டத்தூர், கொண்டசமுத்திரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடியது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் சேத்தியா த்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி.ரூபன்குமாரின் தனிப்படை போலீசார் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாபு, கோபி, ஏட்டுகள் மணிகண்டன், சங்கர், ரஜினி, விஜயகுமார், புகழ் ஆகிய குழுவினர் அடங்கிய போலீசார் திருட்டு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணி ராஜா (37) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வட்டத்தூர், கொண்ட சமுத்திரம், பாளையங்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவில் நகைகள், உண்டியலை உடைத்து பணம் திருடியதாக அவர் ஒப்புகொண்டார். அவரிடமிருந்து ரூ.8லட்சம் மதிப்புள்ள 15½ பவுன் கோவில் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர் கண்மணி ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    ×