search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    1050 கிலோ பறிமுதல்

    இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலப்படாகை கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

    இதில் சுமார் 300 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.

    இது தொடர்பாக 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கீழையூர் போலீசார் வீர முரசு, சசிக்குமார், சுதர்சன், விக்னேஷ், வைரகுமார், முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோபிநாதன் உள்பட 9 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லெப்பைக்குடிகாடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

    அகரம்சீகூர்,  

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரம், அகரம்சீகூர் அடுத்துள்ள லப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சேசு தலைமையில் வட்டார சுதாதார மேற்பார்வை யா ளர்கள் லெப்பைக்குடிக்காடு கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போ து 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையி லைப் பொருட்கள் மறைமு கமாக விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதையடுத்து விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.5000 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பொ ருட்கள் சுகாதார முறையில் குழி அமைத்து புதைக்கப்பட் டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிய ஆதாரங்களுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 2 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த 2 சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு உரிய அனுமதியில்லாமல் 5ஆயிரத்து 100 லிட்டர் டீசல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நாகூர் பண்டகசாலை தெருவை சேர்ந்த அரவிந்த்குமார், நாகை தோள்கிடங்கு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லப்பாண்டி என்பது தெரியவந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 5100 லிட்டர் டீசலையும், 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அரவிந்தகுமார், செல்லப்பாண்டி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    காங்கயம் நகர வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி வருவாய் அலுவலர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்த நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக 13 கடைகளுக்கு ரூ.3500 சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    • இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
    • பஸ் மோதி 2 பேர் இறந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.

    இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

    அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மானம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது 49), திருச்செங்காட்டங்குடி தெற்கு தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 32) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சரவணன்(வயது27) என்பவர் வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    • ரூ.100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, சுந்தராஜன், மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமங்களில் ரோந்து பணி மேற்கொண்ட போது ஆசூர் கிராமத்தில் சுடுகாடு அருகில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர். பொன்னங்குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே காசு வைத்து சூதாடி கொண்டி ருந்த சிவகுமார், ராஜகோபால்,ராஜ்கிரன் ஆகிய 3 பேரை கைது செய்து 40 புள்ளி தாள் ரூ 100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    • நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுப்படி நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவுதமி தலைமையிலான அதிகாரிகள் கூடச்சேரி கல்லாங்காடு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சேம்பர் அருகே ராசாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திர டிரைவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உதவி புவியியலாளர் கவுதமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
    • விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள்.

    சொந்த ஊர்களுக்கு மக்கள் முண்டியடித்து செல்வதால் எவ்வளவு கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதனை செலுத்தி டிக்கெட் எடுத்து விடுவார்கள் என்று கணக்கு போடும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களை குறி வைத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

    இதன்படி போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கடந்த 18-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 5 ஆயிரம் பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பஸ்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யபட்டிருந்தன.

    இந்நிலையில் இன்று காலையிலும் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 18-ந் தேதியில் இருந்து இன்று வரை 4 நாட்களில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தொடர்ச் சியாக மேற்கொண்டு பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
    • திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதன் அடிப்படையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமையில், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் அலுவலர் ஜோதி, கொள்ளிடம் போலீஸார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா (வயது 26) பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கொள்ளிடம் காவல்நி லையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர்.

    விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த 4 கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்ழுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×