search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic bags"

    • 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    காங்கயம் நகர வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி வருவாய் அலுவலர் ஆனந்தராஜன் ஆகியோர் தலைமையில் காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 20 கடைகளில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்த நெகிழிப்பை பயன்படுத்தியதற்காக 13 கடைகளுக்கு ரூ.3500 சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். நேற்று முன் தினம் காங்கயம் நகரப் பகுதியில் 180 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

    • பிளாஸ்டிக்‌ கைப்பைகள்‌, உபயோகிப்பதற்கும்‌, கையாள்வதற்கும்‌ கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவ்விரு நிறுவனங் களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து அனைத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது.

    பாலிஎதிலீன் டெரிப்தாலேட், உயர் அடர்த்தி பாலிஎதிலீன், வினைல், குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலின், பாலிஸ்டைரீன் ரெசின்கள் போன்ற அதிக மூலக்கூறு எடை கொண்ட பாலிமரில் இருந்து தயாரிக்கப்பட்டு சுயமாக எடுத்துச் செல்லும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், உபயோகிப்பதற்கும், கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குளத்தூர் கிராமம் மற்றும் ஆத்தூர் வட்டம், பித்தளைப்பட்டி கிராமம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரியம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை தயாரி க்கும் இரண்டு நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவ்விரு நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
    • 9 கடை உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கண்ணாரதெரு, திருவாரூர் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில்சு காதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

    அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழி) பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 9 கடை உரிமையாளர்களுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

    மேலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கடைகளில் பயன்படுத்தப்படுவதை மீண்டும் கண்டறியப்பட்டால்கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் சீல் வைத்து, கடைகளின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அலுவலர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
    • துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
    • அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு முழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் தொட்டி கள், பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உட்பட 14 பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி

    அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஆட்டோ மூலம் கடந்த 5 நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் சத்தியமூர்த்தி உத்தரவின்படி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் சூப்பர் மார்க்கெட்டுகள், உணவ கங்கள், பேக்கிரிகள், டீக்கடை கள், பழக்கடைகள் மற்றும் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்ப டுத்தபடு கிறதா? என ஆய்வு செய்தனர்.

    பிளாஸ்டிக் பறிமுதல்

    ஆய்வில் ஒரு சில கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த சுமார் 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் தொடர்பாக செயல் அலுவலர் கூறும்போது, தற்போது கடைகளிலும், பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு எடுத்து கூறி இனிவரும் காலங்களில் பயன்படுத்தினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்ப டுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறினார்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 50 கிலோ பைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி வரி தண்ட லர்கள் முத்துப் பாண்டி, நாராயணன், துப்புரவு மேற்பார் வையாளர், இசக்கிராஜ் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உடன் இருந்தனர்.

    • பிளாஸ்டிக்கை சாலையில் வீசுவதால் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
    • ஆய்வில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விட்டு அவை சாலையில் வீசப்படுவதால் மழை நீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

    மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் கடைகள், மீன் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனைத்தொ டர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின்படி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்த லின் பேரில் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்து பூந்துறை, உடையார்பட்டி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வா ளர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள 35 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையா ளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையிலான குழுவினர் 15 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு அந்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையானது தொடர்ந்து அனைத்து கடைகளிலும் மாநகரம் முழுவதும் நடைபெறும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராம்குமார், துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் ஆகியோர் அடங்கிய நகராட்சி குழுவினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், துருகம் சாலை, குளத்து மேட்டு தெரு ஆகிய பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், உணவகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 129 கடைகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் சுமார் 247 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கலந்து தயாரித்த குச்சிப்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். அப்போது தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

    • கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்குள் நாளை (ஞாயிறு) முதல் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஊர் பொதுமக்கள் சார்பாக கோவில் வாசலில் பதாகை(பேனர்) வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் கவர்களில்(கேரிபேக்) தேங்காய், பழம், பூ மற்றும் மாலை போன்ற பூஜை பொருள்களை வாங்கி வர கூடாது.

    நாளை கோவில் வளாகத்திற்குள் பாலித்தீன் கவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மீறி பூஜை பொருட்களை பாலித்தீன் கொண்டு வந்தால் கோவில் முன்பாகவே பணியாளர்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும். எனவே பூஜை கூடைகள், துணிபைகள் மூலமாக பூஜைபொருட்களை கொண்டு வந்து அம்மன் அருள் பெறுங்கள் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பின் மாநில தலைவர் நம்புதாளை பாரீஸ் தலைமை தாங்கினார். பேருராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் முன்னிலை வகித்தார். பெண்கள் உயர்நிலை பள்ளி ஆசிரியை காஞ்சனாஅனைவரையும் வரவேற்றார். வழக்கறிஞர் ஆசிக், பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி, சமூக ஆர்வலர் எஸ்டியார் சீனிராஜன், மாலிக், தலைமை காவலர் ரமேஷ் உட்பட பலர் மஞ்சள் பைகளின் நன்மைகளையும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கின் தீமைக ளையும் விளக்கி பேசினர்.

    இதில் தொண்டி எவரெஸ்ட் நகைக்கடை யினர் வழங்கிய மஞ்சள் பைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    • உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
    • 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.இதில் அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தினா்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.மேலும், சுகாதாரமின்றி செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    சிவகாசி,

    சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்த காரணமாக சில மாதங்கள் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவில் குறைந்தது.

    மக்கள் துணிப்பைக்கு மாறிக்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை தொடங்கியது. தற்போது தமிழகத்தில் 95 சதவீத கடைகளில் மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாத பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியிலும் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகள் அதிகரித்தது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாண்டியராஜ், முத்து பாண்டி, மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் ஊழியர்கள் கடைவீதி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனில் 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர் ரவீந்திரனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகள் சிவகாசி பி.எஸ்.எஸ்.ஏ. ஆறுமுகம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 1500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் சந்திரசேகருக்கு ரூ. 20 ஆயிரம் விதிக்கப்பட்டது. சிவகாசியில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ பிளாஸ்டிக் கவர், பொருட்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×